பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 109. 'அடைக்கலப் பொரு ளாமென நாயெனை அழைத்து, முத்திய தாம் அநுபூதியெ னருட் டிருப்புகழ் ஓதுக வேல்மயில் அருள்வோனே எனப் போற்றி, ‘இறைவா! நான் வேசையர் மயலே மேல. தாய், மகாபிணி மேலிட முடங்கி வெட்க மடைந்த மஹாமத வினைன்; இனி, எனக்கு அவ்வுறவு நேராதிருக்க உன் திரு. வடியின் உறவே உறவாகும் பாக்கியம் வேண்டும்; அத் தகைய பாக்கியத்தைத் தந்தருளுக வேசையர் மயல் மேலாய் வெடுக்கெடுத்து மகாபிணி மேலிட முடக்கி வெட்கு மகா மத வீணனை மினற் பொலிப்பத மோடுற வேயருள் புரிவாயே (850). என வேண்டிப் பணிந்தனர். சிவ பிராற்கு முருகர் முத் தமிழால் உபதேசித்தார் (தேசிகர் சிறக்க முத்தமிழாலொரு பாவக மருள் பாலா’) என்றும் கூறியுள்ளார்: (திருப். 19-77). பக்கம் 93 பார்க்க-இறைவன் இட்ட ஆணையின் படி அது பூதிச் செய்யுள்களும் அப்போது சில பாடினர் போலும். திருத்துருத்தியினின்றும் புறப்பட்டுச் சிதம்பரம், விருத் தாசலம் என்னுந் தலங்களை மறுமுறை பணிந்து (ஆகத் தென்னுட்டுத் தலங்கள் 153 தரிசித்து) முருகவேள் தம்மை ஆட்கொண்ட தலமாகிய தமது திருவண்ணுமலையை அடைந்தார். = = - 2. வடதிசை யாத்திரை 18. திருவண்ணுமலையிலிருந்து காஞ்சீபுரம் வரை (10 தலங்கள்: 154 - 163) திருவண்ணுமலையிற் சிலகாலந் தங்கிப் பின்பு வடக்கி லுள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிப் புறப்பட்டுச் (153A) *செஞ்சிக்கு வந்தார். பின்பு (154) திருவாமாத்துரர் செஞ்சி-பாடபேதஸ்தலம். 79-ஆம் பாடலின் பாட பேதம் பார்க்க.