பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ጙ {0 அருணகிரிநாதர் (733-736) தரிசித்து மாதிசுரரையும், முத்தார்நகை யம்பி கையையும் அழகர், அழகுடையாள் எனத் தமது பதிகங் களிற் சிறப்பித்தார் (734, 735). பின்னர்த் (155) திருவக் கரையைத் (727-728). தரிசித்துக் 'கடிகைப் புனல் சுற்றிய திருவக்கரை” என விளக்கி, ஆண்டவரை 'அடியவரிச்சை யில் எவை எவை யுற்றன. அவை தருவித்தருள் பெருமாளே ..(727) எனப் போற்றி மகிழ்ந்தும், 'கொச்சை மொழிச்சி, கறுத்த விழிச்சி, சிறுத்த இடைச்சி, பெருத்த தனத்தி, குறத்தி தனக்கு மனப்ரிய முற்றிடு குமரேசா”-என அழ காகப் புகழ்ந்தும் (728) பாடினர். பின்பு (156) மயிலம் (328), (157) பேறை நகர் (பெரும்பேறு-726), (158) இந்தம்பலம் (989) என்னுந் தலங்களைத் தொழுது, (159) *வளவாபுரி எனப்படும் செய்யூ (சேயூ) ருக்கு (725) வந்து எனதிடும் பைக் குன்றுக்கும் தனிவேலை வாங்கத் தகும்’ бтбПЛГ முன்னுேர் உரைத்தபடிவேலேவி எனது வினையைத் தொலைத்தவனே _** அடியேன் இரு வினை து.ாள்படவே அயிலேவிய 5) 15 ГГо) III” புரிவாழ் மயில்வாகன ' எனப்போற்றி நன்றி பாராட்டினர். இன்பு, (160) மதுராந்தகத்துக்கு (722-724) வந்து அங்கு 'வட திருச்சிற்றம்பலத்தில்’ வீற்றிருக்கும் வடிவேலனைப் போற்றிச் (722, 723) சிவபிரானுக்கு நீ செய்த உபதேசத் தைச் சிறியேன் தனக்கும் உரைசெய்தால் உனது குருத்து வம் சற்றேனுங் குறைந்து விடுமா, என்ன?'-ான மன் ருடித் துதித்து (723) வணங்கினர். மதுராந்தகத்தில் வட திருச்சிற்றம்பலம் என்பது இன்ன சந்நிதி, இன்ன காரணத் தால் அப் பெயர் வந்தது என்பன விளங்கவில்லை. ஊரின் பெயருக்குத் தக்கபடிச் சந்தத்தைச் சுவாமிகள் எடுப்பர் என் பதற்கு இத்தலத்துப் பதிகங்கள் தக்க எடுத்துக் காட்டாகும். - - = = = -

  • செய்யூர் என வழங்கும் சேயூருக்கு (சேய்=முருகர்) வளவாபுரி என்று ஒரு பெயர் உண்டு. 'வளவர் வளம்பதி” எனவும் வளவ நகரிக்குமர' என்றும் சேயூர் முருகன் பிள் ளைத் தமிழில் வருகின்றன. வளவனூர் என்று விழுப்புரம்புதுச்சேரி ரெயில் மார்க்கத்திலும் ஒர் ஊர் உண்டு.