பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அருணகிரிநாதர் என்ற இடத்து 1 உயிரெழுத்துக்கள் விட்டிசைத்த வழி வல் லெழுத்தின் ஒசை பெற்று 'தத்தா தத்தத்’ என்னும் சந் தக் குழிப்பின் வன்மையை அடைந்து ஒலிப்பது *H, அருமையான ஒரு பிரயோகம். (12) 485-ஆம் பதிகம் சீசி முப்புரம்’ என்பதில் பல தலங்கள் கூறப்பட்டுள; (13) 486ஆம் பாட்டில் 'கச்சிவர் குரும்பை கச்சவர் விரும்பு கச்சியி லமர்ந்த பெருமாளே என வருவதிற் சிலேடை அழகு பொலிகின்றது. கச்சு=ரவிக்கை: இவர் ஏறியுள்ள (மூடி யுள்ள); குரும்பை-குரும்பை போன்ற முலை; கச்சவர் =கைத்தவர், வெறுத்தவர், பெண்ணு சையை வெறுத்த வர் விரும்புகின்ற கச்சிப் பெருமாள்-என்பது பொருள்(14) 488-ஆம் பாடலில் வள்ளியைக் காவற்காரி” என் றும், தேவசேனையைத் தேவப்பூ” என்றும் ஒதியுள்ளார். “தேவப் பூ' என்னும் பிரயோகம் வள்ளிப்பூ நயந் தோயே என்னும் பரிபாடலை நினைவூட்டுகின்றது. (15) 493-ஆம் பதிகத்தில் 'காந்தக்கலும் ஊசியுமேயென ஆய்ந்துத் தமிழோதிய சீர்பெறு காஞ்சிப்பதி” என்பது கந்த புராணத்தை அதன் ஆசிரியரொடு முருகவேள் பார்த்துத் திருத்திக் கொடுத்த அன்பின் சக்தியைக் குறிக் குமாயின் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் காலத்துக்குப் பின் அருணகிரியார் இருந்தனர் என்பது பெறப்படும். சைவ சித்தாந்த மகா சமாஜத் திருப்புகழ்ப் பதிப்பிலே இரண்டு பாக்களில் (525-குதலை மொழியினர்-793 தித் தித்த மொழிச்சிகள்) கச்சியப்ப சிவாசாரியாரைப் பற்றி வருகின்றன. அவைதாம்; (i) 525. மருவு புலவனுர் கவிக்கு ளேசிறு வழுவ தறைமகா சபைக்கு ளேகியெ வகைய ப்ெயரதா இலக்களுவிைதி மொழிவோனே ! (ii) 793. முற்பட்ட இலக்கண நூலிடை தப்புற்ற கவிக்கென் வேஅவை முற்ப்ட்டு புதுத்துறை மாறிய புலவோனே! (16) தேவி திருவடியிற் சிவபிரான் வணங்கினதால் அவர் சடையில் உள்ள கொன்றை முதலியவற்றின் மணம் தேவி 1 - சி கம்பரச் செய்யுட் கோவை 61-ம் பாடலைக் காண்க.