பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 அருணகிரிநாதர் நெஞ்சில் முருகனே செஞ்சொல் தருவதால், எப்படிப் பட்ட சந்தத்துக்கும் இசைய இவருக்கு வாக்கு எளிதில் அமைந்தது. கடின சந்தமுள்ள இச்செய்யுளில் இராவணன் தோள் இருபது என்பதைக் குறிக்க 'இரண்டஞ் சொன்ப தொன்றேய் பனை புயத்தையும்’ என எவ்வளவு நயமாக வாக்கு அமைந்துளது; பாருங்கள்!” -- மாடம்பாக்கத்தினின்றும் புறப்பட்டு (170) திருவான்மி யூரைத் (702) தொழுது, (171) மயிலாப்பூருக்கு (692-701) வந்து, அதைக் கடற்கரைத்தலம் என்றும் (693), அழகு, புலமை, மகிமை, வளம் பொருந்திய தலம் என்றும் (695), எலும்பினின்றும் பூம்பாவை எழும்படி அருட்பாடல் பெற்ற தலம் என்றும் (697) பாராட்டிப் புகழ்ந்தார். பின்பு (172) திருவொற்றியூரைத் (690-691) தரிசித்து அதை ஆதிபுரி என்றும் (690), கடற்கரைத் தலம் என்றும் (691) போற்றி செய்து, (173) ஆண்டார் குப்பம் (737) என இப்போது வழங்கும் தலத்து முருகவேளைத் தச்சூர் வடக்காகு மார்க் கத் தமர்ந்த பெருமாளே” என வாழ்த்தி, அவர் காலத்தில் அந்த மூர்த்தி நாற்றிசையிலும் கீர்த்தி பெற்று பிரதாபத் துடன் இருந்தனர் என்பதைக் காட்டிட 'இப்பூர்வ மேற்குத்தரங்கள் தெற்காகும் இப்பாரில் கீர்த்திக் கிசைந்த தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த பெருமாளே” -எனப் போற்றி மகிழ்ந்தார். தமக்குப் பெரும் பொருளை உபதேசித்த முத்தன் (எட்டா மெழுத்து ஏழையேற்குப் பகர்ந்த முத்தா 1-737) என்றும் நன்றி பாராட்டினர். பின் னும், வேடிக்கையாக-' முருகா! நீ ஒரு நல்ல தச்சன். 1. தமனியப்பதி-தமனியம்=பொன்; மாடை=பொன்; தமனியப்பதி-மாடையம்பதி-மாடம்பாக்கம், தமனியப் பதி பொன்னுTர்;-மாயூரத்துக்கு அருகில் உள்ள தேவா ரம் பெற்ற ஸ்தலமாகிய திரு. அன்னியூருக்கும் பொன். னுணர் எனப் பெயருண்டு. (பக்கம் 36 பாச்க்க)