பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 12. (குன்னம்=ரகசியம்; குறிச்சி-மலைநிலத்து ஊர். வள்ளி மW சென்று-தானே சென்று) என்றுள் செ ய்யுளில் எடுத்துரைத்தார். பின்னும், ஒரு ரக சியத்தை எடுத்து அருணகிரியார் வெளிப்பட மொழிகின் மு. அதாவது 'முருகா! நீ சிவபிரானுக்கு உபதேசித்த ரகரிய உபதேசம் வள்ளிச் சன்மார்க்கமே எனத் தெரிந்து கொண்டேன்’ என்று 'வள்ளிச் சன்மார்க்கம் 1விள்ளைக்கு நோக்க வல்லைக்குளேற்றும் இளையோனே' திருப்(317) -என்னும் பதிக அடியில் எடுத்துரைத்துள்ளார். இங்ங் னம் உலகோர்க்கு ரகசியத்தை வெளியிட்ட அருணகிரியார் மாட்டுள்ள இந்தப் பெருங்கருணையை நினைந்து தான் கரு ஃணக்கு அருணகிரி என்ற உலக வழக்கும், 'ஐயா அருணகிரி அப்பா உன்னைப் போல மெய்யாக் ஒர் சொல் விளம்பினர் யார்? என்னும் தாயுமானவர் வியப்புரையும் எழுந்தன. வள்ளி மலையில் ஆண்டவனை வள்ளி மணவாளப் பெரு மாளே (313, 314) என்றும், வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே (வள்ளி மானை அடைய வேட்டை யாடிய பெரு மாளே) (315-316) என்றும், வள்ளிக்கு வாய்த்த பெரு மாளே (317-319), வள்ளி மலை சென்று வள்ளியை 1. விள் ஐக்கு=வினவிய பிதாவாகிய சிவபிரானுக்கு நோக்க வல்லைக்குள்=கண்ணிமை வேகத்தில்-கூடிண நேரத்தில், இங்ங்ணம் கூடின நேரத்தில் முருகபிரான் சிவபிர்ானுக்கு உபதேசித்த தலம் திருத் தணிகை; அதனுல் அத்தலத்துக்கு கூடினிகாசலம் என்று ஒரு பெயர். உபதேசித்ததைக் கேட்டு மகிழ்ந்து அட்ட ஹாசஞ் செய்ய சிவபிரான் வீராட்டகாசர்' எனப் பெயர் பெற்ருர். 'விராட்டகாசர் கோயில் திருத்தணியில் நந்தியாற் றுக்கு வடக்கிலும், உபதேசித்த சாமிநாதர் கோயில் நந்தியாற்றுக்கு தெற்கிலும் திருத்தணிகையூரின் வட கீழ்ப் பக்கத்தில் உள்ளன.