பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அருணகிரிநாதர் மணந்த பெருமாளே என்றும் (320) வாழ்த்திப் பணிந்: தார். திருவலம் என்னும் தலத்துக்கு அருகில் உள்ள தலம் வள்ளிமலை என்பதைக் காட்ட வல்ல முருகா (314) என் தும், வல்லைக் குமார (316) என்றும் வாழ்த்தினர். அல் லசல் என்னும் 320-ஆம் பதிகத்தில்'கல்லசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே-என்ருர், (கல்-அசலம்-மங்கை-இமயமலை மங்கை-பார்வதி) பார்வதி எல்லை மட்டும் எட்டின கல்விவிஷயம் அதன் வரலாறு; ஒரு முறை சகல கலைகளும் வல்லவர் யார் என்று தேவர், முநிவர்களுக்குள் ஒரு கேள்வி நிகழ்ந்தது. யாவ ரும் ஒளவைப் பிராட்டியாரே சகல கலைகளும் வல்லவர் எனத் தீர்மானித்து வித்யா தாம்பூலத்தை ஒளவையாரிடம் அளிக்க, ஒளவையார் எனக்கு இதை வாங்கும் தகுதியில்லை, ஐந்திர வியாகரணம் இயற்றியுள்ள இந்திரனே இதற்குத் தக்க பாத் திரம் என்ன, இந்திரனை அவர்கள் அடுத்த பொழுது, இந் திரன் அகத்திய முநிவரே இத்தாம்பூலத்தைப் பெறுதற்கு உரியவர் என, யாவரும் அகத்தியரை அண்டிய பொழுது, அம் முநிவர் சரஸ்வதி தேவியே இப் பரிசைப் பெறுதற்கு உரியவள் என, அவர்கள் கலைமகளை அணுகக் கலைமகள் நான் கற்றது கைம்மண் அளவு, நான் கல்லாது எஞ்சி நிற். பது உலகளவு, இப்பரிசுக்கு நான் சற்றும் தகுதி யில்லாத வள்-தேவி-ராஜ ராஜேஸ்வரி- வாகீசுரியாம் உமா தேவியே இப் பரிசை வாங்குதற்கு யோக்யதை உடையவள்; அங்குச் செல்லுங்கள் என, அவர்கள் அங்ங்ணமே சென்று தேவியை வணங்கித் தாம்பூலத்தை நீட்டத், தேவி என் புதல்வன் முத்துக் குமரன் ஒருவனே சகலகலா வல்லவன். இந்தப் பெருமை அவற்கே உரியது. அவனிடம் செல்லுங் கள்' 'எனத் தேவர்களும் முநிவர்களும் கந்தபுரம் சென்று: முருக வேளைத் தரிசித்து வணங்கி விஷயங்களை விண்ணப் பித்துத் தாம்பூலத்தை அளிக்க, எம்பெருமான் புன்னகை பூத்து, "இந்த வரிசையை ஏற்றுக் கொள்வோம்’ எனக்கூறி