பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 123. அவ்வித்யா தாம்பூலத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது சரித்திரம். இச்சரித்திரத்தைக் கல்லசல மங்கை=பார்வதி: வலையில்=வரைக்கும், விரிந்த-மேலே சென்ற (விவாதத் திஸ்) கல்வி கரை கண்ட புலவோன் -என்னும் பெரும்பட் டம் வாய்க்கப் பெற்ற புலவோனே-எனக் கூறிக் குறித்து அருணகிரியார் ஆண்டவனைப் புகழ்ந்தார். இதல்ை சகல கலா வல்லப மூர்த்தி என முருகவேளுக்கு ஒரு பெயர் வந்தது. 319-ஆம் பாடலாகிய ககனமும்’ என்னும் திருப்புகழ் 173, 476 பதிகங்கள் போலக் கரந்துறை செய்யுளுக்கு ஒர் உதாரணமாம். அத்திருப்புகழுள் ஒரு குட்டி திருப்புகழ் அமைந்துள்ளது. அதன் விளக்கத்தை எந்தையார் திருப் புகழ்ப் பதிப்பிற் காணலாம். * = சுவாமிகள் வள்ளிமலையைத் தரிசித்து நேரே (189) திருத்தணிகைக்கு (249-312) வந்தார். திருத்தணிகைத் தரிசனம் தணிகைமலை யழகைப் 1 பார்த்தார். அழகு திருத்தணி ம2லயில் நடித்தருள் பெருமாளே (285)-எனப் பாடினர் : தணிகை ஆண்டவர் அழகைப் பார்த்தார்-"தணிமலை அப் பனே அழகிய பெருமாளே (279), தணிகை மாமலை மணி முடி அழகியல் பெருமாளே (282), தணிகையில் இணையிலி (289)-எனத்துதித்தார். எங்கள் பிரான இந்நாள் காறும் வந்து வணங்காது போனேனே என வருந்தினர். முருகா! பிரமன் நேர்மையுள்ளவனுயிற்றே! அவனுக்கு நான் என்ன குற்றம் செய்தேன். உனது தண்டையந் தாள்களைச் சூடாத சென்னியையும், நாடாத கண்ணையும் பாடாத நாவையும் எனக்கென்றே தெரிந்து அமைத்தனனே-என நினைந்து வருந்தி-(கந். அலங். 76) 1. புவியில் அழகிய செருத்தணி திருவகுப்பு-(வேடிச்சி காவலன் வகுப்பு); "ஏரணி செருத்தணி ஏர்-அழகு. (வேளைக்காரன் வகுப்பு).