பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அருணகிரிநாதர் 263-ஆம் பாடலிற் காண்க. திருப்புகழ் இருப்பவல்-இரும்பு அவல். அவல்போல உண்ணலாம் ; உண்டபின் உண்ட நெஞ்சறி தேனைக்' (46) காணலாம் ; இரும்பு போல உரம் (மைேதிடம்) பெறலாம் ; மரண பிரமாதம் நமக்கில்லை யாம்', அந்தகா வந்துபார் சற்றென் கைக்கிட்டவே’எனக்கூறும் திடம். இருப்பவல் திருப்புகழ்' என்பதற்கு "இருக்கன திருப்புகழ்' என்று ஒரு பாடபேதம் கிடைத்தது. இருக்கு=ருக்வேதம், அன்ன (போன்ற)-திருப்புகழ் எனப் பொருள்படும். இப்பாடலின் ஈற்றடிக்குள்ள பாடபேதங் களை பக்கம் 36, 71-ல் காண்க. (iii) 289-ஆம் பாடல்-இது ஒர் அருமையான பாடல், வள்ளியம்மையின் அழகின் வர்ணனையும், அந்த அழகில் ஈடுபட்டு முருகபிரான் மடலெழுதிய சேதியும் அழகாகக் கூறப்பட்டுள. திருவடி தீகூைடியையும் அரிய உபதேசத்தை யும் ஆண்டவன் தமக்கருளிய திருவருட்பேற்றை எடுத்துக் கூறி, இறைவனைத் தணிகையில் இணையிலி' என வெகு அருமையுடன் பாராட்டிச் சுவாமிகள் இந்தப்பாடலில் நன்றி கூறியுள்ளார். இப்பாடலில் சஞ்சரிகரிகரம்-சஞ்சரீகம்வண்டு; சிந்துவாரம்-நொச்சி: இதழி-கொன்றை; இந்த ளாம்ருத வசனம்-இந்தளப்பண் (நாதநாமக்ரியை ராகம்) போன்ற அமிருத வசனம். ரஞ்சிதாம்ருத வசனம் என்ருர் பிறிதோரிடத்து (திருப். 79) தணிகையில் கிர்த்த தரிசனம் காணப் பெற்றது (iv) இத்தலத்தில் அருணகிரியார்க்கு முருகபிரான் தமது _ே விமர்ர்களுடன் மயில் மீது நிர்த்த தரிசனத்தைத் தந்தருளினர். இது, விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொ டழகு திருத்தணி மலையில் ஆத்து பெருமாளே.(285) 'திண்சிகைம்லை தனில் மயிலில் நிர்த்தத்தில் நிற்கவல பெருமாளே (308) o |தணிமலையி லரியதொரு நிர்த்தத்தில் நிற்கவல பெரு மாளே-என்றும் பாடம் -எனவரும் அருமை அடிகளால் எளிளங்குகின்றது.