பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 131 22. வட இந்தியா : (6 தலங்கள்: 194-199)

ைேசலத்தினின்றும் புறப்பட்டுத் 'தனித்து வழி நடக் கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணையதாகும். திருத்தணியில் கித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனதுள்ளத்தில் கறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’-(வேல் குைப்பு) என்பதே ஜபமாகக் கொண்டு வடதிசை நோக்கிக் காடு, மலை, ஆறுகள் தாண்டிச் சென்று (194) காசியை 1655-657) அடைந்து, “காசியிற் பிரதாபமாயுறை பெரு பெருமாளே ' என்றும், கங்கைப் பதிநதி காசி , காசி கங்கை என்றும் போற்றி, (195) ஹரித்துவார் என்கின்ற மாயாபுரி (6581யைத் தரிசித்துப், பஞ்சாப் மாகாணத்திற் சரஸ்வதி நதிக் கரையில் உள்ள (1961 வயிரவி வனத்து 1659) வடிவேலனை வாழ்த்திச், செல்லுதற்கரிய (1971 திருக் கயிலையையும் 1238-243) தூரத்தே நின்று தொழுது, சிவன் சிவச் சொரூபம் என்பதை விளக்கியும் (239), பூநீ சம் பந்தப்பெருமானைப் போல அமிர்த கவி பாட அடிமைக்கும் அருள வேண்டும்-1"புகலியில் வித்தகர், போல அமிர்த கவித் தொடை பாட அடிமை தனக் கருள்வாயே (242) எனப் பிரார்த்தித்தும் பாடல்கள் பாடினர். பூநீ சம்பந்தப்பெருமா வது திருவருள் கூடின பேற்றினுல்தான், அருணகிரியார் அமிர்த கவித் தொடை பாடினர்; சந்தப்பாவில் தலைமை வாய்ந்த திறத்தினராயினர். பூநீ சம்பந்தர் தாம் அருளிய பாடல் ஒன்றில் தம்மைச் 'சந்த மெல்லாம் அடிச்சாத்த வல்ல மறைஞான சம்பந்தன்” (III-8-11) என்ருர். அவரைப் போலவே சொல்லாட்சி, பொருளாட்சி, சொற்சந்தம் நிரம் பும்படிப் பாட வேண்டும் என்பது அருணகிரியாரின் பேராசை. பூநீசம்பந்தப் பெருமானும் சுவாமிகளுக்குக் கன் விலோ நனவிலோ பேரருள் புரிந்திருக்க வேண்டும்; ஆதி லால் தான் திருப்புகழிலும் கந்தரந்தாதியிலும் பூதி சம்பந்தப் பெருமானது லீலைகளையும், பெருமைகளையும், திருவருட்

!. புகலியில் வித்தகர்=சம்பந்தர்.