பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1?A அருணகிரிநாதர் திருவண்ணுமலை வந்ததும் தமக்கு உகந்த நண்பனுகிய பிரபுடதேவ ராஜனைக் கண்டார். காணுது போன பொரு ளைக் கண்டதுபோல அரசன் இவரைக் கண்டு மகிழ்ந்து குலவிப் பேசிக் களித்தான். இமயமலை முதல் கதிர் காமம் வரையிலும் தலம் தலமாய்ச் சென்று ஆங்காங்குள்ள கோயில் களிலும், கோபுரங்களிலும், மடங்களிலும், மார்க்கங்களிலும், தெருவிலும் உள்ள முருகர் திருவுருவைப் போற்றினது போதா, தென்று அருணகிரியார் திருவண்ணுமலை வந்து சேர்ந்த பிறகு உலகில் உள்ள முருகர் ஆலயம் ஒன்றுகூட விடுபடக் கூடா தென்னும் கருத்துடன்-தொகைத் தலங் களாக ஒரு சேரச் சில பதிகங்களை இருந்த இடத்தே பாடி னர். அவைதாம் :- - o ... (1) ஆறு திருப்பதி (449-450) ஆறுபடை வீடுகளை யும் ஒன்று சேர்த்து அறுபதிநிலை மேவிய பெருமாள்ே . என்றும் ஆறு திருப்பதியில் வளர் பெருமாளே என்றும் பாடினர். கந்தரந்தாதியைப் பற்றிக் கீழே எழுதியுள்ள ஆராய்ச்சியிற் கண்டபடி படை வீடு' என்பது இந்த ஆறு திருப்பதிகளைக் குறிக்க வந்த பிற்கால ஆட்சி. திருப் புகழாதிய நூல்களில் ஆறு படை வீடு என்று கூறப்பட வில்லை. ஆறு திருப்பதி என்றே அருணகிரியாரும் குமர குருபர சுவாமிகளும் கூறியுள்ளார்கள். ஆதலால், திருமுரு காற்றுப் படையிற் சொல்லப் பட்ட ஆறு வீடுகள் என்பது மருவிப்பேச்சு வழக்கில் ஆற்றுப்படை வீடுகள் என ஆகிப் பின்பு படைவீடு, ஆறு படை வீடு எனப் பேச்சு வழக்கிலும் நூல்களிலும் வழங்கலாயின-என்பது எனது சொந்த அபிப்பிராயம். நிற்க. 450-ஆவது பாட்டில் நாண மகற்றிய கருணை புரி வாயே’ என வேண்டினது 'நானது ஒழிந்து நாடவர் பழித்துரை பூணதுவாக” என்னும் திருவாசகத்தை நின்ை ஆட்டுகின்றது. ஆன திருப்பதிகம் அருள்' என்பது ஈசற்கு ஆன தேவாரம் (முருகா! உனக்கு ஆன (இஷ்டமான) சந் தப் பதிகங்களைப் பாட (எனக்கு) அருளிய இளையோனே என்றும் பொருள் காணலாம்.)