பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 137 2. தமது சரித்திரத்தை விளக்குவன : 1. 'குயவன் சக்கர்ம் ஒரு சுற்று சுற்றும் நேரத்துக் குள் என்மனம் எழுபது சுற்று சுற்றுகின்றதே! நான் சிவ பதம் அடையும் நாளும் உண்டோ?’ என அவர் வருந்து வது (1009) 2. மகளிர் .கலவியில் இனி விழுகினும் உன் திருவடி தான் என் உயிர்க்குத் துணை என்று நினைப்பதையும் மொழி வதையும் மறவேன்-என்றது. (1010) 3. அடியார்களுடைய பாதத்தைத் தொழ விரும்பினது (1038), (1273). 4. பிரபுடதேவ மாராஜனது உள்ளம் நெகிழ முருக வேளை மயில் மீது வரும்படி அழைத்தது (1056); 5. 'எனது யானும் வேருகி எவரும் யாதும் யானுகும்' இதய பாவன தீதத்தை அடைய விரும்பினது. (1048) 6; தம்மை ஒரு நீர் ஏருத மேடு என்றது (1066) 7. பெண்முகம் பார்த்திருந்த தம்மைச் சண்முகம் நினைக்க வைத்த முருகனது கருணைத் திறத்தைப் பாராட்டு வது. (1189) H H so 8. இயற்றமிழிற் புது வழியாக *மூருகனைப் பாட விரும்பியது-"இயல் புதுமையாகப் பாடப் புகல்வாயே’ (1025). 9. கெடுதலிலாத ஞானம், நல்ல நூல்களிற் கருத்து, பிரபஞ்ச மாயையிற் படாதவாறு ஆசைக் கடலை வென்ற நிலை, வாக்குக்கு எட்டாத பேரின்பநில்ை, எந்தத் திக்கில் உள்ளவர்களும் இது அற்புதம் என வியக்கத் தக்க தேனுறு திருப்புகழ்ப் பாவை ஒதும் திறம், யான் எனது அற்ற பெருநிலை, மிகுந்த பிரசித்தி, பெருத்த செல்வாக்கு மும்மலத்துக்கும் முக்குணத்துக்கும் ஈடாய பிறவி அறு தல் ஆதிய இத்துணைப் பெரிய பாக்கியங்களை எல்லாம் எனக்கு அன்புடன் அதுக்ரகஞ் செய்த கருணையை