பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அருணகிரிநாதர் பூதம் தொடராமல் நின்றது. பின்னர், அந்த இடத்தை அவர் தாண்டிச் சென்றதும் பூதம் மறுபடி அவரைத் தொடர்ந்தது. அது தொடராமல் நின்ற இடத்தில் ஏதோ விசேஷம் இருக்கின்றதென அவர் அறிந்து சுற்றி வந்து குறித்த அந்த இடத்தில் வந்தபோது அப்பூதங் காணப்பட வில்லை. ஆதலால் அவர் அந்த இடத்திலிருந்த மணலெல் லாவற்றையும் அப்படியே வாரி மடியிற் கட்டிக்கொண்டு வழி நடந்தார். பூதம் அவரைத் தொடராது நின்று விட் டது. வீட்டுக்கு வந்து மணலைப் பரிசோதித்த பொழுது அம்மணற் குப்பையில் ஒர் ஏடு இருந்ததாகவும், அந்த ஏட் டில் இந்தத் திருப்புகழ்ப் பாடல் இருந்ததாகவும் இத்திருப் புகழின் சிறப்பை ஆன்ருேர் கூறுவதாக எந்தையார் கூறக் கேட்டுள்ளேன். 17. 1085 ; 'தமிழ் பாடற் செழு மறை’-இது திரு -முருகாற்றுப்படை-எனக் கொள்ளலாம். வேதமொழி சூட்டு கீரரியல் (1278) என்றதல்ை : எங்கள் கீரன் மொழி :யும் பசுந்தமிழெனுஞ் சொல் வேத நிலை தெரியலாம் (திரு விரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்-அம்புலிப் பருவம்)-என வருவதும் உணரற் பாலது. திரு முருகாற்றுப்படை வேத இசையுடன் சொல்லப்படுவதோர் தமிழ் மறை. "கீத இசை -கூட்டி வேதமொழி சூட்டு கீரரியல் (1278). திருப்புகழ் எங்கள் பதிப்பில் மூன்ரும் பாகத்தில்-திருவகுப்பு பக்கம் 6-அடிக் குறிப்பைப் பார்க்க.) 18. 1097 : கதறிமிகு குமுதமிடு பரசமயம்-கொந் துகா வென மொழிதரவரு சமய விரோதத் தந்த்ரவாதிகள் (திருப். 289); சங்கைக் கத்தோடு சிலுகிடு...சமயிகள் (திருப். 945), சலசல மிழற்றுஞ் சமய விகற்பமும் (பெருங்கதை. க-32-4)-எனவருவன காண்க. 19. 1098.: உலகெலாம் சுற்றி வரும் (முருகரின்) மயி லின் வேகத்தைக் கண்டு (விநாயக) யானை அஞ்சிப் பிளிறி னது.