பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி 149 கவாமிகளாற் கூறப்பட்ட அடியார்கள்-பெரியார்கள்திருப்புகழ் மூன்ரும் பாகத்தில்-திருப்புகழ் ஆராய்ச்சியில்த%லப்புக்கள் 3, 45 பார்க்க, அருணகிரியார்க்குப் பின் வந்து அவரைப் பற்றியோ அவர் நூலைப்பற்றியோ கூறியுள்ள பெரியார்கள்; (1) உமாபதி சிவா சாரியார் அருளிச் செய்த சிவப்ர காசத்துக்கு உரை யெழுதிய மதுரைச் சிவப்ரகாசர்1188A. D-பக்கம் 61 பார்க்க; (1-A)-மயிலம் முருகன் பிள்ளைத் தமிழ் பாடிய திருவாரூர் வைத்திய நாத தேசிகர் (இலக்கண விளக்க ஆசிரியர்) (2) சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் பாடிய அந்தகக் கவிவீர ராகவ முதலியார்; (3) திரு விரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் பாடிய வரகவி-மார்க்க சகாய தேவர்; (4) திருப்போரூர்ச் சந்நிதி முறை பாடிய சிதம்பர சுவாமிகள்: (5), (6) தாயுமானவரும் அவர் மாண வர் அருளையரும்; (7) திரு இலஞ்சி முருகன் உலாப் பாடிய மேலகரம் பண்டாரக் கவிராயர் : (8) திருமலை முரு கன் பிள்ளைத்தமிழ் பாடிய செங்கோடைக் கவிராஜ பண் டாரத்தையா; (9) சென்னிமலை யாண்டவன் காதல் பாடிய ஆசிரியர்; (10) திருத்தணிகைத் திருவிருத்தம் பாடிய தொட் டிக் கலை பூ சுப்பிரமணிய முநிவர்: (11) கேஷத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழ் பாடிய சிதம்பர முநிவர்; (12) தணிகைச் சந்நிதி முறை பாடிய கந்தப்ப தேசிகர். மேற் கூறிய பெரியார்களும் சமீப காலத்திலிருந்த புநீராமலிங்க சுவாமிகள், திருப்புகழ் முருகதாச சுவாமிகள், மாம்பழக் கவிச் சிங்கம், பாம்பன் சுவாமிகள் முதலியோரும் திருப்புகழ்ப் பெருமையையும் அருணகிரியாரின் பெருமையை யும் தமது பாக்களில் மிகச் சிறப்பித்து உரைத்துள்ளார் கள். திருப்புகழ் மூன்ரும் பாகத்திற் சுவாமிகளின் சரித்திர ஆராய்ச்சி அநுபந்தத்தைப் (பக்கம் 20-27) பார்க்க: 11 (1) திருப்புகழ் சுவாமிகள் அருளிய திருப்புகழ் நூலினின்றும் வந்த விஷயங்கள் அவரது வரலாற்றுப் பகுதி