பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


150 அருணகிரிநாதர் யிலேயே ஆங்காங்கு ஆய்ந்தெழுதப் பட்டது. சுவாமிகள் அருளிய பிற நூல்களையும் ஆய்ந்தால் அவர் சரித்திரமும் பிற அரிய விஷயங்களும் தெளிவுற விளங்குமாதலின் அந் நூல்களையும் ஈண்டு ஆராய்வாம். (2) கந்த ரங்தாதி "இலகு கந்த-ரந்தாதி மேலாசை யாவதுயிர்த் தோழி யெனும் நந்தாதி மேலான நட்பு -தணிகையுலா கந்த ரந்தாதி பாட வேண்டிய சந்தர்ப்பத்தை முன்னரே விளக்கியாயிற்று (பக்கம் 99). இந்நூல் சிறந்த ஒரு தமிழ்ப் புலவருடன் வாதிட்டும் பாட வேண்டி வந்த காரணத்தாலும், நூல் யமக அந்தாதி ஆதலாலும், நூலின் பொருள் எளிதில் விளங்காது. அதல்ை, கந்த சந்தாதி யைப் பாராதே கழுக்குன்றத்து மாலையை நினையாதே' என்னும் பழமொழி உலவலாயிற்று. வில்லிபுத்துாரர் செய் துள்ள உரையைக் கொண்டுதான் கந்த ரந்தாதிச் செய் யுள்களுக்கு நாம் பொருள் உணரக் கூடும். தமது ஊர் அருணை ஆதலின் அருணை விநாயக மூர்த்தியையும் தமக்கு ஆதி முதல் பெருந்துணையா யிருந்த உண்ை முலைத் தாயையும் முதலிற் கூறித் தம்மை யாண்ட முருக வேளை உண்ணு முலையுமை மைந்தனே! சரணம் என வணக்கங் கூறி இந்நூல் தொடங்குகின்றது. நக்கீரரிடத் தும் அவர் அருளிய திருமுரு காற்றுப் படையிலும் அருணகிரியார்க்குப் பெரு மதிப்பு உண்டு. அதல்ை, திருமுருகாற்றுப் படையிற் குறித்த ஆறு திருப்பதிகளின் தியானச் சிறப்பையே நூலின் முதற் பாட்டாக எடுத்துரைத் தார். இங்ங்ணம் நக்கீரர், அருணகிரியார் இருவரும் இந்த ஆறு திருப்பதிகளுக்கு ஏற்றந் தந்த காரணத்தால திருமுரு காற்றுப் படையிற் சொல்லப்பட்ட ஆறு வீடுகள் (திருப் பரங் குன்றம், திருச்செந்துார், திருவாவினன் குடி, திரு வேரகம், குன்று தோருடல், பழமுதிர் சோல்) முருகன் அடியாரால் என்றும் பாராட்டப் பட்டு ஆற்றுப்படை வீடு