பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி (கந்தரந்தாதி) 151 கi முதலில் வழங்கிப் பின்பு ஆறுபடை வீடு 1 என மருவி வழங்கலாயின- (பக்கம் 134 பார்க்க). சிவபிரானுக்குத் தேவாரம் சிறந்த புகழ் நூல் அங்ங். கனமே முருகபிரானுக்குச் சிறந்த புகழ் நூல் திருப்புகழ் சிவபிராற் குரிய சிறந்த அகப்பொருள் இலக்கிய நூல் திருக்கோவையார், முருகபிராற்கு உரிய அருமை அகப் பொருள் நூல் கந்தரந்தாதி. இந்த அந்தாதியில் உள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள் சி, சீ, செ, சே, தி, தி, தெ, தே’ என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குவது ஒர் அற்புதமான விஷயம். இனி எங்கள் திருப்புகழ்ப் பதிப் பிற் காட்டப்படாத இவ்வந்தாதியிலுள்ள முக்கிய குறிப்புக் கஃள மாத்திரம் கீழ்க் காட்டுவாம் : செய்யுள் : 1. (திருவாவி): இச்செய்யுள் முருகன் திருப் புகழ் நூல்களைப் பாராயணஞ் செய்யும் முறையைத் தெரி விக்கின்றது. இதன்படி ஆறு திருப்பதிகளை (படை வீடு களை)த் துதித்துத் திருப்புகழ் ஓதுதல் வேண்டும். செய்யுள் 3. (சென்னிய): திருவேரகம் (சுவாமிமலைக்) கோயிலைக் கட்டினவன் தெய்வத் தன்மை பெற்ற சோழ ராஜன் ஒருவன் (கோச் செங்கட் சோழன்) எனத் தெரிவிக் கின்ருர். * செய்யுள் 6. (செவ்வந்தி): முருகபிரான் அணியும் மலர்களுள் செவ்வந்தியும் (சாமந்தியும்) நீலோற்பலமும் கூறப்பட்டுள. செய்யுள் 8 (சீதனங்) தனத்தைப் (பொருளை) சீ” 1. படைவீடு என்பதற்குள்ள தலைநகர், காவல் கொண்ட நகர் என்னும் பொருள்கள் இந்த ஆறு வீடுகளுக்கும் பொருந்தா; ஆதலின், மரூஉ என இங்குக் காட்டியவாறு கொள்வதே சாலப் பொருத்தமாம். இதல்ை தான் திருப்புகழிலும் பிற பழைய பழைய ல்களிலும் ஆறு படை வீடு' என எங்குங் கூறப்படவில்லை. ஆறு திருப் பதி அறுபத நிலை”, “ஆறு நிலை என்றே கூறப்பட் டிருக்கின்றது. பிற்கால ஆட்சியில் தான் ஆறு படை வீடு' என இத்தலங்கள் ஆறும் வழங்கப்பட்டுள.