பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாரய்ச்சிப் பகுதி (கந்தரந்தாதி) 155. கன்மிசை வைத்த திருக்கை, புறத்தொரு கூன்மிசை வைத்தனர் - ைவ த் த லு .ே ம - இருகூனும் நிமிர்ந்தன. தென்னவர் கோன் முதுகுந் தடமார்பும் இடம் பெறவே" -எனவரும் தக்க யாகப் பரணி-216ஆம் செய்யுளால் விளக்கம் உறுகின்றது. பரணி உரையாசிரியர் முன்னும் பின்னும் ஒக்க நிமிர்ந்தவாறே தடமார்பும் அழகிய முதுகும் ஆயின என்ருர். செய்யுள் 59. (சேர்ப்பது) இப்பாட்டை எலுமிச்சம் பழப்பாட்டு’ என்பர் முருகவேள். இப்பெயர் வரலாற்றை யான் எழுதியுள்ள முருகரும் தமிழும்' என்னும் நூலிற் பக் கம் 50-51 பார்க்க. - செய்யுள் 67. (சிகண்டி) இது நலம்புனைந் துரைத் தல்” என்னும் அகப்பொருட் டுறையது. செய்யுள் 71. (திங்களும்): என் ஐயிரு திங்களும் மாசு(ண்)ணமாக்கும் பதாம்புயன்’ என்பது 'அவன் கால் பட் டழிந்ததிங் கென்தலை மேலயன் கையெழுத்தே'- என் னுங் கந்த ரலங்காரச் செய்யுளை (40) நினைவூட்டுகின்றது. மடலெழுதலின் அருமை கூறும் பாடல் இது. திருக்கோவை: யார் பாட்டு 76-79 பார்க்க, எங்கள் பதிப்பிற் குறிப்புரை யும் பார்க்க. செய்யுள் 73. (திசாமுக): பழமுதிர் சோலையை இச் செய்யுளிலும் முதற் செய்யுளிலும் தண்கார் வரை என் றும், 'உவா இனன் (யானைக் கூட்டம்) குடிகொண்ட வரை', 'தந்தி சமுகம் (யானைக்கூட்டம்) நண்ணும் வரை’ என்றும் வருணித்துள்ளார். இக்கருத்து மஞ்சுசூழ் சோலை மலை’ எனச் சிலப்பதிகாரத்திலும், திண்டிறல் மாகரிசேர் திருமாலிருஞ்சோலை’ எனப் பெரிய திருமொழியிலும் வருதல் காண்க. செய்யுள் 75. (செய்தவத்); (1) பஞ்சாகூடிரம் ஜெபித்த லின் பயன் கூறுகின்றது. இதல்ை முருகன் அடியாங்