பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அருணகிரிநாதர் மேற் கண்டபடி வைததே இயற்றமிழ், வள்ளியம்மை 'இந்தளாம்ருத வசனம் உடையாள் ; ‘ரஞ்சிதாம்ருத வசனமுடையாள் என அருணகிரியார் திருப்புகழிற் (289, 79) சொல்லி யுள்ளார். வள்ளி-யாழைப் பழித்த மொழி யாள், பண் நிலாவிய பேச்சினள்; ஆதலின் அவள் பேச்சே இசைத் தமிழ். வள்ளிப்பிராட்டி குறத்தியாதலின் வைத சமயத்தில்-தனது ஜாதியின் வழக்கப்படி-கையையும், உட லையும், தலையையும் தனது வைதற் பேச்சுக்கு ஒத்த வண் ணம் ஆட்டிக் கூத்துக் காட்டி யிருப்பாளாதலின் அவளது ஆட்டத் தமிழே நாடகத் தமிழாம்; ஆக, முத்தமிழால் முரு கரை வைதாள் வள்ளி என்பதில் ஐயப் பாடொன்றுமில்லை. "மொய்தாரணி குழல்’ என்பது அங்ங்னம் வைது வெற்றி பெற்றதற்கு அடையாள மாலையாம் (கூந்தற்) பூச்சூட்டு திTதிUTது. செய்யுள் 24. (கின்னங்)-இச் செய்யுளில் குன்னம்’ (உபதேசித்த ரகசியப் பொருளை) குறிச்சி-வள்ளி ம2லப் ப்ர தேசம் வெளியாக்கி விட்டது என்கின்ருர். இதன் விவரத்தை 188-ஆம் தலம் வள்ளி மலையின் திருப்புகழ் ஆராய்ச்சியிற் காண்க. (பக்கம் 120, 121) செய்யுள் 26. (நீலச்): எந்த நேரத்திலும் கோலக்குறத்தி யுடன் வருவான் என்றது எங்கே நினைப்பினும் அங்கே என் முன்வந் தெதிர் நிற்பனே (கந். அலங். 104) என்னுங் கருத்தது. செய்யுள் 27. (ஒலையும்): வாகை என்பது ஆகு பெயராய் வெற்றி நிலைத்து நிற்கும் வேலாயுதத்தைக் குறிக் கின்றது. சீரா என்பது சிறிய கூரிய (அரையிற் கட்டும்) உடைவாள் என்பது திருப்புகழ் 750, 1045, 1132, 1139 எண்ணுள்ள பாடல்களாலும், கந்தரலங்காரம் 81-ஆவது செய்யுளாலும் தெளிவு பெறும்; கந்தரந்தாதி 80-ஆம் செய்யுட் குறிப்பைப் பார்க்க. (பக்கம் 156) செய்யுள் 29. (கடத்திற்): திருப்புகழ்ப் பாடல்களிற் பல இடங்களில் வேசையர் மயக்கை வெல்லும் வழி