பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி (கந்தரலங்காரம்) 163 யாதோ எனக் கலங்கின கலக்கம் இறைவன் திருவருளால் அடியோடு தொலைந்தது இச் செய்யுளைப் பாடிய காலத்திலே என்பது-இச் செய்யுளால் நன்கு விளங்கும். செய்யுள் 31. (பொக்கக்) சந்தத் தமிழ் பாடுவதில் சுவாமிகள் வல்லவ ராதலின் கட்டளைக் கலித்துறையால் ஆய இந் நூலிலும் சில பாடல்களின் பின் இரண்டடிகள் சந்த நிறைந்த முடுக்குச் சொற்களாற் பொலியுமாறு அமைத்துள்ளார். செய்யுள்கள் 4, 7, 37, 61, 92-பார்க்க. செய்யுள் 32. (கிளைத்துப்) : 'சூர் மார்புடன் கிரியூடு ருவ’-இங்கு, - கிரி' என்பது எழுகிரி , கிரெளஞ்சமலை அல்ல. திருப்புகழிலும் பிற நூல்களிலும் சூருடன் கிரி என வந்தால் அங்குக் கிரி என்பது எழுகிரியே ஒழிய கிரெளஞ்ச மலை அல்ல, கிரெளஞ்சமலை தாரகா சுரனுக்கு உதவிய யிருந்து அவனுடன் வேலால் அழிபட்ட மலை. சூரனுக்கு உதவியாயிருந்து வேலால் தொளைபட்ட கிரி எழுகிரி, ஏழு கிரி' எனப்படும். சூரனுக்குக் காவலாகி ஏழுகிரிகள் எப்பொ ழுதும் மறைந்திருந்து துணை செய்தன என்றும், சூரனையும் அம் மலைகளையும் ஒரே காலத்தில் வேலால் முருகவேள் அழித்தனர் என்றும் தக்க யாகப்பரணி 5, 170 எண்ணுள்ள தாழிசைகளாலும் அவைக்குரிய உரைப் பகுதிகளாலும் அறி கின்ருேம். எழுகிரியைக் குறித்துவரும் பாடற் பகுதிகளிற் சில ஈங்கெடுத்துக் காட்டுவாம் :

  • கிளைபட் டெழுசூர் உரமுங் கிரியும் =

தொளை பட் டுருவத் தொடுவே லவனே (கந். அது. 4) 'உழல் சூரும் மலைமார்பும் உடனுாடுற (தக்க-பரணி. 5 தாழிசை) 'எழுமலை கொல்லும் அசனி இளமயில் வள்ளி கணவன்’ (டிெ - 170) * எழுமலை பொடித்த கதிரிலை நெடுவேல் (கல்லாடம் 3) எழுகிரி யார்ப்பெழ வென்ற வேலா-திருப்புகழ் 990 "எழுகிரிகள் பிளந்துவிழ எறிந்த வேலா-டிை 548 "எழுசயிலந் தொளைத்த சுடர்வேலா-டிெ 581