பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (கந்தரலங்காரம்) 167 செய்யுள் 75. (படிக்கின்றிலை); படிக்கின்றிலை பழநித் திரு.காமம்’-இது பழநி என்னும் ஸ்தலப் பெயரை ஜெபித்தலின் விசேடத்தைக் காட்டுகின்றது. இது அநுஷ் டானத்துக்குக் கொண்டுவர வேண்டிய ஒரு மந்திரம். தலப் பெயர்களை ஜெபித்தல் அவசியம் என்பது-பிதற் முய் பிறை சூடி தன் பேரிடமே என நீ சம்பந்தப் பெரு மரன் கூறியுள்ளதால் விளங்கும் (கூேடித்திரக் கோவைப் பதி »ib II—39—1] o செய்யுள் 76. (கோடாத): இது திருத்தணிகை யாண்டவரைத் தரிசித்து வணங்கிப் பாடுதலின் அவசி யத்தை உணர்த்துகின்றது. மனத்தாற் கருதித் தியானிக் கத் திருச்செந்துாரையும் (கந்.அந் 33; திருப்புகழ் 471, வாக்கால் பெயர் சொல்லிச் செபிக்கப் பழநியையும் (கந், அலங்காரம் 751 காயத்தால் வணங்கிப் பணியக் (கோடாத' என்னும் இவ் வலங்காரப் பாடலால்) திருத்தணிகையையும் சுவாமிகள் குறிப்பித்துள்ளார் என்பது அறிந்து அநுட் டிக்கத் தக்கது. பக்கம் 93-ம் பார்க்க. செய்யுள் 84. (மைவரும்): 'என்பெற்ற தாயரும் என்னைப் பினமென் றிகழ்ந்து ட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பி விட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத் தாா உன்பற் ருெழிய ஒருபற்று மில்லை உடையவனே!' -என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கு இங்கு நினைவுக்கு வரும். செய்யுள் 85. (காட்டிற்): "குறத்திபிர்ான் பதத்தே கருத்தைப் புகட்டின் வீட்டிற் புகுதல் மிக எளிதே' இது நாம் கடைதேறுவதற்காகச் சுவாமிகள் அருளிய சுருக்கவழி உபதேசம்; அவசியம் அநுட்டிக்க வேண்டியது.