பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 அருணகிரிநாதர் செய்யுள் 87. (குமரா): அமராவதியில் உள்ள முருக வேளின் திருவோலக்க தரிசனையை அருணகிரியார் அடிக் கடி விசேடித்துச் சொல்லுவது உணர்தற் பாலது. அமரா வதி விண்ணுலகத்துக்குத் தலைநகர், அங்குள்ள முருக வேளின் தரிசனப் பேறு ஞான தபோதனர்க்கே கிட்டுவது. அருணகிரியார் தமது ஞானக்கண்ணுலும், கிளி ரூபத்தில் விண்ணுலகுக்குச் சென்றபோது நேரிலும் தரிசித்திருக்க லாம். அங்ங்ணம் தரிசித்த பிறகு அல்லது தரிசித்தபொழுது இச்செய்யுள் பாடப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு ஐயம் நிகழ் கின்றது. அருணகிரியார் விசேட அநுக்ரகம் பெற்ற தலங் களுள் அமராவதி ஒன்று என்பது-கற்பகாடவியில் வாழ் வித்த வேதியனும் வேடிச்சி காவலனே' என வரும் வேடிச்சி காவலன் வகுப்பால் அறிகின்ருேம். பூத வேதாள வகுப்பிலும் கற்பகாடவி சொல்லப்பட்டுளது. இதைப்பற்றித் திரு வகுப்பு-வேடிச்சி காவலன் வகுப்புக்குரிய குறிப்பினும் கந்த ரந்தாதி 29-ஆம் செய்யுட் குறிப்புரையிலும் காண்க. மேலும் ஏறுமயி லேறிவிளை யாடு முகம் ஒன்றே என்னும் பாடலின் ஈற்றடி ஒரு ஒலைப்புத்தகத்தில் 'ஆதி அருணு -சலம் என்பதற்குப் பதிலாக ஆதி அமராவதி அமர்ந்த பெருமாளே என்றிருந்தது. * செய்யுள் 95. (யான்தான்): இச் செய்யுளைத் தாயு மானவர் 'யான்தான் என லறவே இன்பநிட்டை என்றரு ணைக் கோன்தான் உரைத்தமொழி கொள்ளாயோ' என எடுத்தாண்டுள்ளார். இச்செய்யுளின் பொருளை உணர்ந்து கூடியமட்டும் அதன்படி நடத்தலை நமது வாழ்நாளின் நோக் காகக் கொள்ளுதல் வேண்டும். சத்தியம்-எழுவாய்; தோன் ருது-பயனிலை. யாவருக்கும் சத்தியம் தோன்ருது-எனப் பொருள் கொள்ள வேண்டும். சத்தியம்=உண்மைப் பொருள். தலைவி பங்கர்க்குச் சத்தியமுரைக்கும் பெரு மாளே” திருப். 460. யான்தான் எனுஞ்சொல் இரண்டுங் கெடல்:- யாைெடு தான் இலாச்சுகோதய ஞான வார்த்தை -திருப். 1260-என வருமிடத்துங் காண்க. “யான் என்பது போலத் தான் என்பதும் ஜீவபோதம் முன்ந்து நிற்பதைக்குறிக்கும் ஒரு சொல்.