பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (கந்தரநுபூதி) 169 "தானென் றவர்முன் ஒளித்தோடித் தன்னை யிழந்தவர்முன் யானென்று சென்றிடுங் காசிப் பிரான் காசிக்கலம்பகம் 84. யான்தான்-என்பதற்குத் துவைத பாவம் எனப்பொருள் கொண்டு நீவே றெதிைருக்க நான்வே றெணு திருக்க’ |திருப். 220) என்னும் அத்துவித உண்மையைக் கூறினர் -எனவுங் கொள்ளலாம். தான்நின்றெனத் தனக் குள்ளே ஒளிக்குமென் தன்மை நிற்க யான்நின்ற போதெனக் குள்ளே ஒளித்திடும்’ பண்டார மும்மணிக் கோவை-4. “யானுகிய என்னை விழுங்கி...தாய்ை நிலை நின்றது (கந் தர் அது.-28) என வருவன இங்கு உணர்தற்பாலன. 4. கந்தரநுபூதி அநுபூதி ஐம்பதுமே ஆருயிர் பேரின்ப அநுபூதி நல்கும் அணி- (தணிகையுலா] சிவபெருமானுக்கு உரிய திருமுறைகள் முதலிற் பத்து: பின்பு அவை பதினுென்ருகிப் பின்னர்ப் பன்னிரண்டாயின. அதுபோல முருகவேளுக்கும் பத்துத் திருமுறை முதலில் அமைதல் தகுதியாம்; (i) இசைப் பாக்களாய தேவாரம்-ஏழு திரு முறைகள் அவை போல இசைப் பாக்களாய திருப்புகழை ஏழு திரு முறைகளாகப் பிரிக்கலாம். ஆறு படை வீட்டுத் திருப்புகழ் கள்-ஆறு திரு முறைகள். பிற தலங்களின் திருப்புகழும் பொதுத் திருப்புகழும் ஏழாந் திருமுறை. (ii) இயற்றமிழில் எட்டாந் திருமுறை-திருவாசகம்திருக்கோவையார்-இவைக்கிணையாகத் திருவாசகம் அனைய கந்தரலங்காரமும் திருக்கோவையா ரனைய கந்தரந்தாதியும் எட்டாந் திருமுறையாம் என்க. (iii) இசைத் தமிழாய் ஒன்பதாந் திருமுறையாக விளங் கும் திருவிசைப்பாவுக்கு ஒக்க இசைப்பாவாம் திருவகுப்பு ஒன்பதாந் திருமுறையாக விளங்கும்.