பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி (கந்தரநுபூதி) 175 செய்யுள் 17. (யாமோதிய); தாமே பெற - தாம் என்பது வேலவரைக் குறிக்கின்றது. தாம் ஒருவரே பெறும் பொருட்டு-எனப் பொருள் படும். வேலவர் தாம் பெறு தற்காகவே எமக்குக் கல்வியும் அறிவும் தந்துள்ளார்: ஆதலால் எமது கல்வியையும் அறிவையும் அவர் பெறு மாறே செலவிடுவேன்-என்க. அவரையே புகழ்வேன் அவரைப்பற்றியே பேசுவேன்-என்றபடி இக்கருத்தை "என்னை நன்ருக இறைவன் படைத்தனன் தன்னை நன்ருகத் தமிழ்ச் செய்யு மாறே என்னும் திருமந்திரச் செய்யுளோடு (81) ஒப்பிடுக. செய்யுள் 32; (கலையே): கலையே பதறிக் கதறிஇதன் கருத்தைக் கலகக் கலை நூல் பல கொண்டெதிர் கத றிப் பதரு (1142), கதறிய கலை கொடு (1152), கதற்று மநேகங் கலைக் கடலூடுஞ் சுழலாதே (257) என்னும் திருப் புகழ்ப் பாக்களிற் காண்க. செய்யுள் 36: (நாதா). முதலிரண்டடியில்-அரனுர் வணங்க நீ அவருக்கு உபதேசித்த ரகசியப் பொருள் யாதோ என வினவினர். அந்த ரகசியப் பொருள் இன்ன தெனப் பின்னிரண்டடியிற் சொல்லாமற் சொல்லுகின்ருர். அரனுர்க்கு உபதேசித்த ரகசியப் பொருள் வள்ளிச் சன் மார்க்கம்’ என முன்னரே குறித்தோம் (பக்கம் 120, 162), அதாவது, இறைவன் உண்மை அடியார்க்குக் குற்றேவ லுஞ் செய்வான்' என்பதே முருகவேள் சிவனுக்கு உபதேசித்த ரகசிய உபதேசம். இங்கு உண்மை அடி யாள் வள்ளி. பிரமனுதிய தேவர்களெல்லாம் சிரசிற் சூடிக் கொள்ளும் மலர்ப்பாதகிைய நீ வள்ளியின் பாதத்தைச் ஆசிரசிற் சூடிக் கொண்டாய் (வேதா முதல் விண்ணவர் சூடு மலர்ப் பாதா குறமின் பதசேகரனே !)-என்ருர். இதனுல் முருக வேள் வள்ளிதாசன் என்பது பெறப்பட்டது. இக் கருத்தாகிய அரும்பே மேதகு குறத்தி திருவேளைக் காரனே எனவரும் திரு வேளைக்காான் வகுப்பாகப் பின்னர் மலர்ந் தது. சிவபிரானும் தேவர்களும் உன்னை வணங்கினர் ; நீ