பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 அருணகிரிநாதர் வள்ளியை வணங்கிய்ை என்ற இவ்வநுபூதியின் கருத்தை -'எங்கள் பைம்புன மேவும் தீதிலா வஞ்சியம் சித பாதம் படுஞ் சேகரா I தண்டையங் கழல் பேணித் தேவி பாகம் பொருந்து ஆதிநாதன் தொழும் தேசிகா ! உம்பர் தம் பெரு மாளே (1107)-என்னும் திருப்புகழிலுங் காணலாம். முத்து பிள்ளைத்தமிழ் - செங்கீரை - 5-ம் பார்க்க. செய்யுள் 37. (கிரிவாய்); பொறையின் விசேடத்தைக் கந்தரந்தாதி 84-ஆம் செய்யுளிலும் காண்க. செய்யுள் 45. (கரவாகிய) : குலிசாயுத குஞ்சரவா ! எனப் பிரித்துக் குலிசாயுதத்தை உடையவனே ! பிணி முகம் என்னும் யானையை உடையவனே-எனப்பொருள் காண்பர். குலிசாயுதன் (இந்திரனுக்கு உரிய) குஞ்சரத் தால் (ஐராவத யானையால்) வளர்க்கப்பட்ட தேவசேனைக்கு உரியவனே ! என்பதும் நன்கு பொருந்தும். செய்யுள் 51. (உருவாய்) : விதியாய் எ ன் ப து உண்மை அடியவர்களுக்கு முருக வேள் (அயன் கையெ ழுத்தை) பிரமன் எழுதிய (விதி) எழுத்தை அழித்துத் தாமே புதிய விதியைப் பொறிப்பதை (எழுதுவதை)க் குறிக்கும். அங் ங்ணம் பிரமன் எழுதிய எழுத்தை முருகவேள் அழித்து விடுவா ரென்பது பெரியோர்கள் அநுபவத்திற் கண்டது. இதன் உண்மையை அவன் கால் பட்டழிந்ததிங் கென் தலை மேல் அயன் கையெழுத்தே' என்னுங் கந்தரலங்காரச் செய்யு ளிலும் (40), என் ஐயிரு திங்களும் மாசு(ண்)ணம் ஆக்கும் பதாம்புயன்' எனவரும் கந்தரந்தாதிச் செய்யுளினும் (71) காண்க. அங்ங்ணம் பிரமன் எழுதிய எழுத்தை அழிக்குங் கார ணத்தால் இறைவனே விதி'யாகின்ருர். விதியான வேத விகிர்தன்-என்ருர் சம்பந்தர். திருநாரையூர் (2). | (5) திருவகுப்பு அருணகிரியார் மதுரைத் தலத்தில் முருகவேளைத் தரி சித்தபொழுது ஒரு வேண்டுகோள் செய்தனர். அதாவது,