பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அருணகிரிநாதர் டுனே கொண்டும், இப்பொழுது கிடைத்து அச்சிடப்பட் டுள்ள திருப்புகழ்ப் பாக்கள் இவரது திருவாக்கே எனக் [...] கொண்டும் இவ் வாராய்ச்சி நூல் எழுதப்படுகின்றது. 1 இளமையும் வறுமையும் : பொழுதைப் பாழுக் கிறைத்தது இவர், இளமையிலேயே தேவாரம், திருமந்திரம் திரு முருகாற்றுப்படை, திருக்குறள், காரிகை ஆகிய தமிழ் நூல் களிற் பழக்கம் உற்றும்1, உலா, ஏசல், கலம்பகம், கோவை, 1தேவாரம் ஆதிய நூல்களிற் பழகியுள்ளா ரென்பதற்குச் சானறு : (i) தேவாரம் : திரிசிராப்பள்ளி பூரீ சம்பந்தர் தேவாரம் 'நன்றுடையானைத்தியதில்லானை' என்பதைத் திரிசிராப்பள் ளித் திருப்புகழ் 332, 331-ம் பாடல்களிலும், ! போகமார்த்த பூண் முலையாள் என்னும் தேவாரப் பதிகம் பச்சையாய் அழலில் வேகாது இருந்த சரிதத்தைத் திருநள்ளாற்றுத் திருப்புகழ் 812-ஆம் பாடலிலும் குறித்துள்ளார். பூநீ சுந்தர்ர். மாணிக்கவாசகர் என்பவர்தம் சரித்திர நிகழ்ச்சிகளைப் பல இடங்களில், திருப்புகழ்ப் பாடல்கள் ற் குறித்துள்ளார் ; எங் கள் திருப்புகழ்ப் பதிப்பில் ஆராய்ச்சியிற் பர்ர்க்க. அப்ப்ரைக் குறித்து ஒன்றும்கிடைக்கவில்லை; எனினும் அவர் தமக்கையார் திலகவிதியாரைத் திருவாமூர் திருப்புக்ழிற் (744) குறித்துள் ளார். (ii) திருமந்திரம் : எங்கள் திருப்புகழ்ப் பதிப்பிற் கந் தரலங்காரச் செய்யுள்கள் 6, 55, 67ன் கீழ்க் குறிப்புக்களைப் பார்க்க. யான் எழுதியுள்ள ' அருணகிரிநாதரும் திருமூல நாதரும் என்னும் நூலகத்தும் பார்க்கலாம். (iii) திருமுருகாற்றுப்படை : 'உலகம் உவப்ப' என்று நக்கீரருக்கு முருகவேள் அடி எடுத்துக்கொடுத்து அரிய விஷ யத்தைத் தமது திருப்புகழில் (203-கடிமாமல்ர்) சுவாமிகள் கூறியுள்ளார்; அந்தணர் வெறுக்கை, எனத் திருமுருகாற் றுப்படையில் வருவதை 'வேதியர் வெறுக்கை' என வேளைக் காரன் வகுப்பில் எடுத்தாண்டுள்ளார். முருகவேளின் 醬 புயங்களின் செயல்களை நக்கீரர் திருமுருகாற்றுப்படையிற் கூறியவாறே அதற்கோர் விளக்கவுரைபோலத் தாம் பாடிய