பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 அருணகிரிநாதர் நிபுண...கவிமாலை சூடுவதும் (ஆசுகவியாக முத்தைத்தரு’ என்னும் பதிகத்தை முதலாகக்கொண்டு மொழிந்தனவாய்த் திறம் வாய்ந்தனவான கவிமாலைகளைச் சூடுவதும் சீறடியே); மதுப முகரித...கவிமாலை என்பது (முநிவர்களாகிய) வண் டுகளால் முகர் (முகரப்பட்ட) (மோந்து அநுபவிக்கப்பட்ட) இதம்=இனிமைதரும்-கவிமாலை எனப் பொருள்படும். இக் கருத்தை 'அலந்து மதுகர முநிவர் பரவ வளர் கமலம் அனைய திருவடி யினைகள்’ எனவரும் சிவப்ரகாசச் செய் யுளிலும் (3) “முநிவராகிய வண்டுகள் ஆசைப்பட்டுத் தோத் திரம் பண்ண நிறம் வளராநின்ற செவ்வித் தாமரை மலர் போன்ற அவனது பூரீ பாதங்கள்’’ எனவரும் அதன் உரை யினுங் காண்க. மவுன முகுள பரிமள நிகில கவிமாலை என்பது-தாம் மவுன நிலையைவிட்டு வாய் (அரும்பி) திறந்து பாடிய மனம்வீசும் எல்லாப் பாமாலைகளையும்எனப்பொருள்படும். மவுனம்=மவுன நிலை; முகுளம்= அரும்புதல், மலர்தல்; நிகிலம்=எல்லாம்; இதல்ை சுவாமிகள் அருணை வடவாசலில் தவநிலையில் இருந்த பொழுது'மெளன விரதம் அநுட்டித்து வந்தார் என்பதும், மவுன நிலைவிட் டது-முருகன் வேல்கொண்டு பொறித்தவுடன் முத்தைத் தரு’ என்னும் பதிகம் பாடினபொழு தென்பதும் ஒருவாறு யூகித்து அறிதலாகும்; நிகில கவிமாலை சூடுவதும்-என வருவதால் அருணகிரியார் பாடிய எல்லாக்கவிகளையும் முருகவேள் ஏற்றுக் கொண்டார் என்பது நன்கு புலப்படு கின்றது.1 புய வகுப்பில் அடிமை தொடுத்திடு புன்சொ லொன்று(ம்), நிந்தியாமற் புனைந்தன என வருவதையுங் காண்க; 1 தாம்பாடிய திருப்புகழை ஏற்றுக்கொண்டதாக முருக வேள் ஒரு குறிப்புங் காட்டாத காரணத்தால் திருப் புகழ் பா ஏடுகளை எல்லாம் உருவி அருணகிரியார் கட லில் எறிந்து விட்டார் என்னும் கர்ண பரம்பரைக்கதை கட்டுக்கதை என இதல்ை அறிகின்ருேம். இறைவன் அருணகிரியார் ಸ್ಥಿ ஏன்று கொண்டதற்கு அடையாளம் அவரது திருவடி முத்திரை அப்பாடல் களில் பொறிக்கப்பட்டதே. (பக்கம் 160 பார்க்க).