பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


184 அருணகிரிநாதர் தல்) செய்து தமது ஆணவ அழுக்கை அகற்றி ஆவியைப் பிரகாசப் படுத்தினதும் (2) திருவண்ணுமலையிற் கோபுர முகப்பில் (தம்மை யாண்ட) அடையாளக்காரனுக வீற்றி ருந்து தமக்கருள் புரிந்ததும், (3) தமது வாதனையைத் (துன்பங்களைத்) தவிர்த்ததும், (4) வழி தெரியாது ஒரு பெருங்காட்டில் தாம் திகைத்த பொழுது தம்முன் வழிகாட் டியாய் வெளிப்பட்டுச் சகாயம் புரிந்ததும் (பக்கம் 76-77) -ஆய தமது சரித்திர நிகழ்ச்சிகளைச் சுவாமிகள் இவ்வடி களால் தெரிவிக்கின்ருர். அடி 9. யான்', 'எனது அறுதல்-இது அருமையான உண்மையைத் தெரிவிக்கும் ஒரு நல்லுபதேசம். இதனை உணர்ந்து பயன்படுத்த வேண்டும். கந்தரலங்காரச் செய் யுள் 85 குறிப்பைப் பார்க்க-(பக்கம் 168). அடி 12: 'ஏழையின் இரட்டை வினையாயதொருடற் சிறை யிராமல் விடுவித்தருள் நியாயக்காரனும் எனக் கூறித் தமது மாநுட உடலம் மறைந்ததைப் பற்றித் தமது மகிழ்ச்சி யைத் தெரிவிக்கின்ருர் (பக்கம்145) நியாயக்காரன் என்ப தற்கு உரிய குறிப்பைப் பக்கம் 145ன் கீழ்க்காண்க. இந்த அடி-உடலைப் பற்றியுள்ள வினை நீக்கத்தைக் குறிக்கின்றது எனக்கொள்ளவுங் கிடக்கின்றது. பெருத்த வசன வகுப்பில் 'இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல் இணக்க மறவொரு கணக்கை யருள்வதும்... ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே என வருவதைக் காண்க. அடி 15. மதவெற்பு-ஐராவதம்; இ வ. ரு ம் - ஏறும் : யானை-தேவசேனை. அடி 17. ஜம்முகச் சிவனே அறுமுக குகய்ை வந்தமை யால் 'முக மாயக்காரன்’ என்ருர். அடி 18. வாரணபதி-ஐராவதத்துக்குத் தலைவை கிய இந்திரன். இந்திரனுக்கு அசுரரால் உற்ற பயத்தை அடிக்கடி தொலைத்து உதவிய நாரணன். வாரண பதிகஜேந்திரன் எனக் கொள்வாரும் உளர்.