பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


186 அருணகிரிநாதர் லன் வகுப்பு 22-ஆம் அடியாலும், புயவகுப்பு 22ஆம் அடியாலும் அது ஒரு பெண்பூதம் என்றும் தெரிகின்றது. அடி 15. அப்படி பத்தி பழுத்த-அப்படி என்னும் சொல்லின் பொருள் வேடிச்சி காவலன் வகுப்பு. அடி 19-ன் குறிப்பைப் பார்க்க. (பக்கம் 1911. அடி 16. ஆறு நிலை என்பது ஆறு திருப்பதிஆறு படைவீடு. (பக்கம் 151-அடிக்குறிப்பு பார்ர்க்க) 41-80 அடிகள் : பரணி நூல்களில் உள்ளவாறு மிக அருமையான போர்க்களத்துப் பூத வேதாள வர்ணனை. முருக வேள் சூர சங்காரஞ் செய்த போர்க்களத்தில் உலவிய அனேக வித பூத வேதாளங்கள் (1) சிறு பிள்ளைகள் புளியங் கொட்டைகளில் ஒற். றையா இரட்டையா’ பிடித்து விளையாடுவது போல யுத்து களத்தில் இறந்து பட்ட் அசுர மன்னர்களின் முடிகளி னின்றும் சிதறி விழுந்த ரத்ன மணிக் குவியல்களை வைத்துக் கொண்டு ஒற்றை இரட்டை பிடித்தனவாம். (அடி 45). (2) குகைகளில் யோகஞ் செய்யும் யோகீசுரர்கள் போல இறந்து பட்ட யானைகளின் வயிற்றிற் சுகமாகத் துரங்கிக் கொண்டிருந்தனவாம் (அடி 56). (3) ருசிகரமான மாமிச விற்பனைக் கடை வைத்துள் ளேம் எனக் கூறி இறந்த யானைகளின் எலும்புகளைக் கொண்டு கடைகள் கட்டி வைத்தனவாம் (அடி 57). (4) பல வித தாள பேதங்களுடன் பல வித ராகங் களைப் பாடிக் களித்தனவாம். (அடி 61-80). அடி 63-65, 70-74: தாளங்களின் பெயர்களும், ாாகங்களின் பெயர்களும், வாத்தியங்களின் பெயர்களும் சொல்லப்பட்டுள. தா ள ங் க ளு ஸ் சச்சபுடம், சாசபுடம், சட்பிதா புத்திரிகம், சம்பத்து (வேட்டம்), உற்கடிதம்எனப்படும் பஞ்ச தாளங்களும் : ரா. க ங் க ளு ள்-வாரளி சிகண்டி, பால (பாலை ?), சீகாமரம், விபஞ்சி, கவுட (கவுடி ?), பயிரவி, லளிதை, கவுசிகம், கவுளி, மலகரி,