பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (திருவகுப்பு) 189: என்னும் உலக்கையால் குத்தி-உலை வைத்துச் சமையல் செய்யும் ஒரு பேய்க் கூட்டம். கறையடி யானை,-பெரும் பாண்-351; கறை=உரல்: 'முத்துலைப் பெய்முதுகுன் றமே-சம்பந்தர் 131.7., களிற்று மருப் புலக்கையினில்... தரளத்தினை குறுவாளை...திருப். 7.97. கருங்களிற்றின் வெண் கொம்பால்...இடிப்ப ஈங்கோய் மலை எழுபது, 20. (பக்கம் 152) அடி 11 : தடித்து=மின்னல் : கட்கம்=வாள். அடி 13. அதரத்து விரற்பட வைத்து அரவத்தொடு கொக்கரிக்கும் ; பிள்ளைகள் உதட்டில் விரல் வைத்து சீழ்க்கை யிடுவது (ஊதுவது) போலச் செருக்களத்திற் பேய்கள் தமது வாயிதழில் விரல் வைத்துச் சீழ்க்கை யிட்டன б) ППГLD в அடி 14. முக்கி-மொக்கி ; நிரம்பவுண்டு. 9. போர்க் களத் தலகை வகுப்பு அடி 25. பாரத யுத்தத்திற் கோபாலன் பூபாரந் தீர்த் தது கூறப்பட்டுளது. 10. திருஞான வேழ வகுப்பு சிவஞானத்தைச் செயலற்ற அநுபூதி நிலையின் மீதுற்று விளங்கும் மவுன, நிர்க்குண, சிவமய ஞானக்களிறு, என்ருர். ஞானத்தை வேழத்துக்கு ஒப்பிடுதல் உண்டு. சிவ ஞானக் கடாக் களிறு (கந்தர் கலி வெண்பா); முத்தி நாடெய்த வோர் ஞான வாரணம் நல்குதி-பண்டார மும் மணிக் கோவை 2 ; போதகம் போதகம்’-பாசவதைப் பரணி-545. (போதகம்-ஞானம், யானை): சிவஞான வேழம் (களிறு) செய்ய வல்ல பெருஞ் செயல்கள் பதி னெட்டு என்கின்ருர். இந்தச் சிவஞான வேழம் (1) உடற் சிறையை நீக்கி நிட்கள வெளியில் நிற் கும் ; (2) சமய தர்க்க விரோதிகளைச் சிதறி மோதி