பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (திருவகுப்பு] 195 காத்து அப்பூதத்தின் மார்பைப் பிளந்த சரித்திரம் கூறப் பட்டுளது. அடி 24. இந்த அடி முருகவேளின் தியாகாங்க சிலத்தை (கொடைப் பெருமையை) மிக அருமையாக எடுத் துக் கூறுகின்றது. அடியவரிச்சையில் எவை எவை யுற் றன. அவை தருவித்தருள் பெருமாளே என்னும் திருப் புகழ்க் (727) கருத்தது. சிந்தாமணி, மேகம், காமதேனு (சுரபி), சங்க நிதி, பதுமநிதி (கஞ்சம்=தாமரை-பதுமம்) என்னும் இந்த ஐந்து பொருள்களின் கூட்டத்தை (பஞ்ச சாலம்-ஐந்தின் கூட்டம்) முருகவேளின் புயங்கள் கொடை யில் வென்றன-என்ருவது ; பஞ்ச சாலம்-ஐந்து தருக் களின் கூட்டம்-எனக் கொண்டு சிந்தாமணி, மேகம், காம தேனு, சங்கநிதி, பதும நிதி, கற்பகத்தரு ஐந்து (அதா வது சந்தானம், அரி சந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற் பகம் என்னும் ஐவகைத் தெய்வ விருகூடிங்கள்) - ஆகிய இவை எல்லாவற்றையும் முருக வேளின் புயங்கள் கொடைத் திறத்தில் வென்றன-என்ருவது பொருள் கொள்ளலாம். அடி 30: அடிமை தொடுத்திடு புன்சொல்... புனைந் தன.-சீர்பாத வகுப்பு அடி 23-24 குறிப்பைப் பார்க்க (பக் கம் 180 பார்க்க). 16. சித்து வகுப்பு (i) அடி முதல் 36 வரை: இவை பல பச்சிலை மூலிகை களின் பெயர்களையும் பிற மருந்து வகைகளின் பெயர்களை யுங் கூறிப் பல சித்து வகைகளை விளக்குகின்றன. (ii) அடி 37 முதல் 72 வரை : இது சித்தன் கூறுவது -'நான் ஒரு சித்தன் ; (பல நகைகளின் பெயர்களைக் கூறி) |இந்த நகைகளுடன் பாட்டி புதைத்து வைத்த குடத்தில் உள்ள பணத்தையுங் கொண்டு வா; அவை எல்லாவற்றை யும் கூட்டி உருக்கி நான் ரசவாதஞ் செய்வேன்; அதிலி ருந்து வருங் கோடிக் கணக்கான செம்பொன்ன்ைக்கொண்டு நீ ஏழு நிலைமாட வீடு மேய்ந்து (கட்டிக்) கொள்ளலாம், இது