பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/217

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி (திருவகுப்பு] 197 அடி 6. இருவரே இருந்த போதிலும் பலர் இருந்த போதினும் அவர் நடுவில் இருக்கும் பொழுது பார்த்தவரெல் லாம் இவன் ஒருவன் ஒப்பற்றவன்-ஒரு ஞானி-என்று பாராட்டும் படியான உணர்ச்சியைப் (பேரறிவைப்) பெற கலாகும். தனித்தோ, கூட்டத்திலோ நாம் இருந்தால் நம்மை நோக்கும் பொழுதே இவர் ஒர் மாபுருஷர் என்று பிறர் எளி திற் கண்டறியும் படியான அறிவின் பொலிவு (ஞானதேஜஸ்) நமக்குக் கூடுதலாகும். அடி 8. பலிப்பது அகல விடும்-(பிறவித்) தோற்றங் களை நீங்கும் படிச் செய்யும்; அல்லது (வினையிட்டங்கள்) தோன்றிப் பெருகுதலை விலக்கும்-எனக் கொள்ளலாம். பர மேசர் ஒரு சற்றும் உணரார்...என் ஊழ்வினை பலித்தது வுமே (மதுரைக் கலம்பகம் 20). அடி 10. இது தில்லையில் தாம் பெற்ற நிர்த்த தரி சனப் பேற்றினைக் கூறுகின்றது. (பக்கம் 27-28). அடி 15. மலைக்குப் பேரயிைருந்தும் மலையிடியத் துணித்தான் என்பது துஷ்ட நிக்ரகம் செய்வதில் முருக வேளின் நடுவு நிலைமையைக் காட்டுகின்றது. ஒருவர் தனக்கு வேண்டியவராயிருந்த போதிலும் அவர் பிழையான வழியிற் சென்ருல் அவரை முருகன் தண்டிப்பான் என் பது குறிப்பு. 18 சிவலோக வகுப்பு இவ்வகுப்பு அன்பின் சிறப்பை எடுத்துக் கூறுகின் றது. இன்பம் தேக்கிய (நிறைந்த) அன்பே சிவலோகம் என்ருர் (அடி 16). அன்பு சிவம் இரண்டென்பார் அறி விலார், அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்-என்பது திருமந்திரம் (270). காரைக்காலம்மையார் சிவபிரானிடம் கேட்ட் முதல் வரம் 'இறவாத இன்ப அன்பு'(பெரிய புராணம்-காரைக்கால்-60) இறவாத=அழிவு இல்லாத, இது தான் இன்பந் தேக்கிய அன்பு இவ் வன்பு என்னும் சிவலோகம் தருவது பதினறு பேறுகள் அவைதாம்