பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி (வேல், மயில் விருத்தம்) 199. (7| 14-ஆம் வகுப்பான 'வேல் வாங்கு வகுப்பு-நித் திய பயத்தைத் தீர்க்கும் மருந்து வேல் வகுப்பு என்ருல்இவ்வேல் வாங்கு வகுப்பு-அணு குண்டு வகுப்பாம் பெரு மருந்து வகுப்பு’ என்க. போர், பூகம்பம், வெள்ளம், திஎனப்படும் பெரிய ஆபத்துக்களி னின்றும் நம்மை விலக்க வல்ல பேராற்றல் வாய்ந்தது. (8) -17-ஆம் வகுப்பு; கடைக்கணியல் வகுப்பு: நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் நன்னுேக் கத்துடன் உலகோரை நல்வழிப் படுத்தி அவர்களுக்கு உய் யும் வழியை எடுத்துரைக்கும் பெருங்கருணை வகுப்பு இது. பிரசங்க காலத்திற் பலருக்கும் பயன்படுவ்கையில் அறிவூட் டத்தக்கது. இதைத் திருவருட் ப்ரசாத வகுப்பு’ எனவும் கூறலாம். மேற் காட்டிய இவ்வெட்டு வகுப்புகளும் பாரா யணத்துக்கும் மனப்பாடத்துக்கும் மிக உரியனவாம். வேல் விருத்தம், மயில் விருத்தம்,திரு எழு கூற்றிருக்கை. இவை சுவாமிகள் திருவாக்காக இருக்கலாம். சேவல் விருத்தம் என்று கூட ஒரு நூல் இருக்கிறதென்று கேள்வி. அதை வைத்துள்ளோர் அதை வெளியிடல் நன்ரும். 'ஆடும்பரி, வேல், அணி சேவலெனப் பாடும் பணியே பணியா அருள்வாய்”-என வேண்டின சுவாமி கள், வேல், மயில் சேவலைத் தனித்தனி விருத்தங்களாற். பாடி யிருக்கக்கூடும். திரு எழு கூற்றிருக்கை சம்பந்தப் பெருமான் பாடிய திரு எழு கூற்றிருக்கையைப் பின்பற் றியது. இதிற் சில பாகம் குறைவாக உள்ளது. எங். கள் திருப்புகழ் மூன்ரும் பாகத்திற் காணவும். சுவாமி களது நூல்களைப் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புக்கள் இவ்: வாறு ஒருவாறு முடிகின்றன. இனி, சுவாமிகளது கவித் திறம், உபதேசதத்துவங்கள் முதலியவற்றை ஆராய்வாம். 12. அருணகிரி நாதர் கவித்திறம் 1. அருணகிரியார் நாற்கவிராஜர் சுவாமிகள் வரகவி யாதலின் நால்வகைக் கவியிலும் குருத்துவம் பெற்ற கவியாவர். ஆதலின், இவரை நாற்.