பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அருணகிரிங்ாதர் பொருளுள்ளவரைத் தேடி, அவரைப் *பலவாருகப் புகழ்ந்து பாடிப் பொருள்பெற்று அப்பொருள்களையும் வேசையர்க்கே ஒழித்தனர். பின்னர், வறுமையும் பொல்லாப் பிணிகளும் இவரைத் தொடர்ந்து ஒடுக்கின. தன் நிலையை உணர்ந்து மிக வெட்க மடைந்தனர்.* இவரது நிலையையும் இவர் முன் செய்துள்ள பெருந்: தபோ பலத்தையும் உணர்ந்த அருளுசலேசுரரே எனத் தோற்றிய தவப் பெரியார் ஒருவர் இவர் முன் தோன்றி மிக்க அன்புடனும் இனிய வசனத்துடனும், 'அன்ப ! நீ தவ நிலையில் இருந்து ஆறுமுகக்கடவுளை இடைவிடாது தியானிப்பாயாக’’--என உபதேசித்துச் சென்றனர். அவ் வுபதேச மொழியைப் பின்பற்ருது சிலகாலம் இவர் விணக்கினர். பெரியார் உபதேசித்தும் இப்பிள்ளை நல்


---

  • 1 மோக மாயையில் விழுந்து தணியாமல்

பெருகியொரு காசே கிெர்டாதவரை ஐந்து தருவை நிக ரே யாக வேயெதிர்பு கழ்ந்து பெரியதமி ழேபாடி நாடொறு மிரந்து* (உழன்று திரிவேனுே திருப் 146 2. இயல்வாணர் தெரியும் அருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவிபாடித் திரியும் o மருள் |திருப். 290 3. அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிக ளாக்கிப் புகழ்ந்து, அவரை வாழ்த் தித்திரிந்து பொருள்தேடி தெரிவைமார்க்குச் சொரிந்து அவமே யான் 瀏鸞 மார்க்கத்து நிந்தை யதனை மாற்றிப் பரிந்து தெளிய மோகூடித்தை யென்று அருள்வாயே. (திருப். 494 4. சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக் கேளென ற்பதைத் தவிர்வேனே. -திருப். 1108 * 1. மிடியால் மயக்கம் உறுவேனே -திருப். 214 2. வறுமையாகிய தீயின்மேற் கிடந்து, நெளியுநீள் புழுவாயி னேற் கிரங்கி யருள்வாயே திருப். 753. 3. வேசையர் மயல் மேலாய் வெடுக்கெடுத்து மகா பிணிமேலிட முடக்கி வெட்கு மதாமத வீணனை. -திருப். 850.