பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 அருணகிரிநாதர் கவி ராஜர் என்னலாம். இவர் ஆயிரக்கணக்காய் (16,000) :பாடல்கள் பாடியுள்ளாராதலின் இவர் வித்தார கவியாவர்; ஒசை யின்பம் ததும்பும் பலவகைய மதுர கவிகளைஇனிய சந்தப் பாக்களைப்-பாடியுள்ளாராதலின் இவர் மதுரகவி யாவர். அத்தகைய மதுரகவிகளுக்கு உதாரண மாகத் திருப்புகழில் 115-குன்றுங் குன்றும் 126-கடலைச் சிறைவைத், 340-புவனத் தொரு, 610-காயமாய-889கந்தவார்-முதலிய பல பாடல்கள் உள்ளன. ஒரு திருப் புகழில் பிறிதொரு திருப்புகழ் கரந்துறையும் பாடல்களும் (178, 819, 476), ஒரே எழுத்து வர்க்கத்தில்-தகர எழுத்து வர்க்கத்தில்-சொற்கள் அமைந்துள்ள பாடலும் (திதத்தத் தத்-கந்தர் அந்தாதி 54), வல்லோசையே மிக்குவரும் பாடல்களும் (திருப். 474, 477), மெல்லோசை, இடையெழுத் தோசையே மிக்குவரும் பாடல்களும் (72, 839, 664, 665)ஆகப் பலவகைய விசித்திரப் பாடல்களும் இவர் பாடியுள் ளாராதலின் இவர் சித்ர கவிப் புலவராவர். திருப்புகழ், கந்தரந்தாதி முதலியன் ஆசு கவியாகப் பாடிய காரணத் தால் இவர் ஆசுகவியும் 1 ஆவர். சுவாமிகளே 'நான் ஆசு பாடி யாடி நாடொறும் (1129) என்று கூறியுள்ளார். 2. அருணகிரியார் முத்தமிழ் அரசு இனி, இவர் முத்தமிழ் அரசும் ஆவர்: செந்தமிழ் மணம் கமழும் அலங்காரம், அநுபூதி, அந்தாதி என்னும் இயற்றமிழ்ப் பாக்களைப் பாடித் தமது இயற்றமிழ்ப் புலமை யையும், கணக்கில்லாத நுண்ணிய தாள அமைப்புக்களை யும், இசை நுணுக்கங்களையும் கொண்டுள்ளனவாய் இசைத் தமிழுக்கே இலக்கியமாய் நன்கு அமைந்த 'திருப்புகழ், திரு வகுப்பு’’ என்னும் வண்ணப் பாக்களைப் பாடித் தமது இசைத் தமிழ்ப் புலமையையும், திருப்புகழ்ப் பாக்களுள்ளும் பிற நூல்களிலும், நாடக இயலின் இனிமை பெரிதும் விளங் எழுத்தாணி முதலிய கொண்டு, யோசித்து எழுதுத ன்றி உடனுக்குடன் பேசுவதுபோல எளிதில் ப்ரிடும் கவி-ஆசுகவி.