பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (கவித்திறம்) 201 கப் பாடித் தமது நாடகத் தமிழ்ப் புலமையையும் சுவாமிகள் விளங்கக் காட்டியுள்ளா ராதலின் சுவாமிகளை முத்தமிழ்ப் புலவர், முத்தமிழரசு" எனக் சங்கையின்றிக் கூறலாம். நாட கத்தமிழின் பொலிவு காணக்கூடிய இடங்கள் ஒருசில இவ ரது நூலகத்தினின்றுங் காட்டுவாம். 1. ஜீவாத்மாவுக்குப் புத்தி புகட்டல் : 'அடா அடா ! நீ மயக்கமேது சொலாய் சொலாய் ! வாரம் வைத்த பாதம் இதோ இதோ (திருப் 441) 2. மனதுக்குப் புத்தி புகட்டல் : 'அந்தோ மனமே ! நம தாக்கையை நம்பாதே' -திருப்(330) 3: யமைெடு வாது : 1. பட்டிக் கடாவில் வரும் அந்தகா ! உனப் பாரறிய வெட்டிப் புறக்கண் ட்லாது விடேன்*கட்டிப் புறப் படடா சத்திவாள் என்றன் கையதுவே. (கந். அலங் 64) 2. தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கியுன்னைத் திண்டாட் வெட்டிவிழ் விடுவேன்*ஞானச்சுடர்வடிவாள் கண்டாயடா! அந்த்கா வந்துபார் சற்றென் கைக் கெட்டவே. (கந். அலங். 25) 4. தேவர் முதலானேரைச்சூரன் போருக்கழைத்தல் : இமையவ ரனவர்க்கும் அறையோ அறையோ! அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ! எழு புவி உலகுக்கும் அறையோ அறையோ பொர வாரும் (திருப். 1140) 3. அருணகிரியார் நவரச நாவலர் இனி, அருணகிரியாருடைய நூல்களில் நவரசங்களை யுங் காணலாகும். உதாரணம்:[1] சிங்கார ரசம் (இன்பச்சுவை) : 1. சிற்றின்பச் சுவை கொந்துத் தருகுழல் இருளோ புயலோ ! விந்தைத் த்ருநுத்ல் சிலையோ பிறையோ!