பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி (கவித்திறம்) 207 விசித்ரமணி ' என்னும் விநாயகர் துதியில்-வித்தக மருப் புடைய பெருமாளே ! உயர் திருப்புகழ் விருப்பமொடு செப் பெண் எனக் கருள்கை மறவேனே என வருவது உணர் தற்பாலது. (பக்கம் 63-64 பார்க்க) : திருப்புகழ் என் னும் சொற்ருெடர் பூரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளால் முன் னரே ஆளப்பட்டுளது ; திருப்புகழ் விருப்பாற் பாடிய அடியேன் படுதுயர் களையாய் , திருப்புகழ் விருப்பாற் பன்னலந் தமிழாற் பாடுவேற் கருள்வாய் ( பா சு ப தா பரஞ்சுடரே)-(திருமுல்லைவாயில் தேவாரம்). இங்ங்னம் பொதுவாக இறைவன் புகழைக் குறிக்கும் திருப்புகழ்' என் னும் சொல், பின்னர் அருணகிரியாரது சந்தப் பாடல் களுக்குப் பெயராக அமைந்து, அதன் பின்னர்க் கால முறையில், பேச்சு வழக்கில் பொருள் பெருகி, சந்தப்பா வாகத் தொங்கலுடன் பாடப்படும் எல்லாப்பாடல்களை யும் குறிப்பதாயிற்று-உதாரணம் - பஞ்சரத்னத் திருப் புகழ் , ராமாநுஜதாசர் நூற்றெட்டுத் திருப்பதித் திருப் புகழ் முதலியன. 8. அருணகிரியாரின் கவித்திறம் (பொது) ஒரு ஆசிரியருடைய கவித்திறம் சாலச் சிறந்தது எனக் கூற வேண்டுமாயின் அவரிடம் ஏனைய ஆசிரியர்களி டம் காண்பதற் கரிதான சிறந்த இலக்கணங்கள் கானப் படவேண்டும். அங்ங்னம் இருப்பதைக் கண்டு தான் ஒரு கவியின் பெயர் இஞ்ஞாலத்துப் பொலிவுற்று நிற்கும். கம்ப ராமாயணத்திலுள்ள ஆழ்ந்த பொருள், அரிய உபமானங் கள், தண்ணெனச் செல்லுநடை, இடத்துக்கேற்ற நடை அமைப்பு முதலியவைகளைக் கண்டல்லவா : கல்வியிற் பெரியவன் கம்பன் ” என்னும் உலக வழக்கு அமைந்தது. அங்ங்னமே, அருணகிரிநாத சுவாமிகளின் திருவாக்கி ளிைல், ஆழ்ந்த பொருளமைப்பு, பொருளுக்கேற்ற சந்த அமைப்பு, தடைபடா நடை, இசைக்குந் தாளத்துக்கும் இலக்கியமாய் நிற்குஞ் சந்தக்கோவை முதலியன முற் பட்டு நிற்கும் மேம்பாட்டால் அல்லவா வாக்கிற் கருன் கிரி” என்னும் அருமையான சிறப்பு அவர் வாக்குக்குக்