பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 அருணகிரிநாதர் தாசலம்’ என்னும் தலத்துக்குப் பாட-'குடத்தாமரை என வும், மதுராந்தகத்து’ என முடிக்க வேண்டிய வழி சயி லாங்கனைக்கு எனவும் எடுத்துள்ளதை நோக்கவும் (பக்கம் 110, 111). சொல்லமைப்பு மிக்க சாதுரியமாக இவருக்கு இயையும். உதாரணம் : கண்ணை வர்ணிக்குமிடத்து அது கோலோ வாளோ, வேலோ சேலோ', 'மீனே மானே’- எனவும், வேசையர் மயக்கைக் கூறுமிடத்து அவர் கொண்டைச் சொருக்கிலே' 'இன்பச் செருக்கிலே’, நெஞ்சத் திருக்கிலே’-எனவும், அங்கக் குலுக்கிலே’, ‘செங்கைக் கிலுக் கிலே’, அந்தப் பிலுக்கிலே’-எனவும் அடுக்கடுக்காகக் கூறிப் போவார். அவ்வாறே இறைவன் திரு நாமங்களும் சந்தம் எதுவாயிருந்த போதிலும் எளிதாக அடுக்கி அமையும். உதாரணம். 1. குமர குருபர! முருக! சரவன! குக! சண்முக1 க்ரி பிறகான குழக! சிவசுத (196) 2. வேந்த குமார! குக! சேந்த! மயூர! வட வேங்கட மாமலையி லுறைவோனே! (247) . 3. சரவண கந்த! முருக! கடம்ப! தனிமயில் கொண்டு பார் சூழ்ந்தவனே 1 (64) சிலேடை யழகுக்கு 177ஆம் பாடல் 'குழல் அடவி முகில் என்ற திருப்புகழின் பின் நான்கு அடிகளும் கரந் துறை பாட்டுக்குத் திருப்புகழில் 173-ஆம் பாடல் (கருப் புவிலில்), 319-ஆம் பாடல் (ககனமும்) என்பனவும் தக்க உதாரணங்களாம். 3. சொற்பிரயோகம் இவர் சொற் பிரயோகங்களிற் சில சில இடத்து வேடிக் கையுங் காட்டுவர். உதாரணம் (1) மரண யாத்திரையை ஒருவர் வருக அரிய பயனம்’ (1069) என்பர். கடல்’ எனக் கூற வேண்டிய வழி ஒற்றைப் பகழித் துாணி’ (577) என் பர். ஒற்றைப் பகழி என்பது விஷ்ணு. துாணி-அவ்வம்பு கிடக்கும் இடம்-கடல், (2) வேசியரைக் கப்பரை கைக் கொள வைப்பவர் (1228) என்கிருர். அஃதாவது இருக் கும் பொருள்களைக் கவர்ந்து பிச்சை யெடுக்கக் கப்பரை தேடும்படியான நிலைக்குக் கொண்டு வருபவர் என்பது