பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 அருணகிரிநாதர் தனம் (திருப்-981) என்கின்ருர். (2) பதி, பசு, பாசம் என் பதில் பதியை விளக்கப் புகுந்தவர் அதை 'அவனிவ னுவனுடை னவளிவ ளுவளது இதுவுது எனுமாறற் றருவுரு ஒழிதரு உருவுடையது பதி”(1246) என விளக்கினர். (3) இலங்காதகனத்தைப் பற்றிக் கூறவந்த வர்- இலங்கை மாநகரில் இலங்குகின்ற (விளங்குகின்ற) இல் லங்களுள் (வீடுகளுள்) எந்த எந்த இல்லத்தில் அருள் இலங்க இல்லையோ அங்கெல்லாம் தியே! நீ இலங்குக-எனத்தியை ஏவின குரங்கு என அநுமாரை வர்ணிக்கின்றனர். இதனை

இலங்கையி லிலங்கிய இலங்களுள் இலங்கருள் இலெங்கனும்

இலங்கென முறையோதி இடுங்கனல் குரங்கு-(704) எனவரும் அழகிய அடியிற் காண்க. (பக்கம் 107). 5 நடைச்சிறப்பு வசன நடைக்கும் செய்யுள் நடைக்கும் வேற்றுமை கூற வந்த ஆங்கிலப் புலவர் ஒருவர் சொற்கள் மிக நன்ருக அமைந்தது வசனம்’ என்றும் மிக நன்ருன சொற்கள் மிக நன்ருக அமைந்தது செய்யுள்' என்றும் விளக்கினர். மிக நன் ருன சொற்களை மிக நன்ருக அமைப்பதில் நமது சுவாமி கள் மிக வல்லவர். உதாரணமாக-அவர் மூப்புப்பருவத்தை யும் இறுதி நாளையும் வர்ணிக்கும் அழகைப் பாருங்கள். 'முனை யழிந்தது; மேட்டி குலைந்தது; வயது சென்றது; வாய்ப்பல் உதிர்ந்தது முதுகு வெஞ்சிலை காட்டி வளைந்தது; ப்ரபையான முகம் இழிந்தது; நோக்கும் இருண்டது; இருமல் வந்தது; தூக்கம் ஒழிந்தது; மொழி தளர்ந்தது; நாக்கும் விழுந்தது...பலநோயும் நிலுவை கொண்டது: பாய்க்கிடை கண்டது ஜலமலங்களின் நாற்றம் எழுந்தது.” (1193) இதில் நடையின் ஒழுங்கு (Balance of Style) என்ன அருமையாக இருக்கின்றது. சிறந்த கவிகளின் பிறிதோரி லக்கணம் என்னவெனில் உள்ளதை உள்ளவாறே கண்ணெ