பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/234

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


214 அருணகிரிநாதர் டும்; நான் நல்ல நிலைபெற்று உனது அழகிய திருவடிகளை எப்பொழுதும் அன்போடு நினைத்திடல் வேண்டும்; இவ் வரங்களை எல்லாம் அருள்செய்ய வேண்டும்; அறுமுகப் பெருமானே.” என்கின்ருர். இக்கருத்தை எவ்வளவு அரு மையான சந்தத்தில் எவ்வளவு எளிதாக அமைத்துள்ளார் பாருங்கள் ; 'அறுமுகப் பெருமாளே ! குயில்மொழிக் கய்ல்விழித் துகிரிதழ்ச் சிலேதுதற் சசிமுகத் திளநகைக் கண்குழ்ற் றனகிரிக் கெர்டியிண்டப் பிடிநடைக் குறம்கட் டிருவினைப் (புணர்வோனே ! சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத் தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுனது பெறற் சரணம்ெப் ப்ொழுதுநட் பொடு நினைத் திட-அருட் (ட்ருவாயே..” (672) இவ்வளவு அருமையாகப் பாடல்களைப் பாடும் திறம் இவருக்கு எங்ங்ணம் வாய்த்தது ? தமிழ்க் கடவுளாம் நமது முருகக் கடவுளின் திருவருளால் அல்லவா ? இசைத்தமிழுக் குச் சிறந்த முதல் இலக்கியமாயுள்ளது சம்பந்தப் பெருமா னது தேவாரம். நாளும் இன்னிசையாற் றமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்'-என சுந்தரமூர்த்தி சுவாமிகளே வியந் தோதி உள்ளனர். சம்பந்தர் போல அமிர்த கவி பாட வேண்டும் இறைவனே என நமது அருணகிரியார் வரங் கேட்டுப் பெற்றுள்ளனர். (பக்கம் 1311. யார் வேண்டினுலும் கேட்ட பொருளியும் த்யாகாங்க சிலராகிய நமது அறுமுகப் பெருமானும் அருணகிரியாருக் குக் கேட்டவாறே வரந் தந்து உதவினர். சுவாமிகளும் தாம் வேண்டியவாறே சகல இலக்கணங்களும் நிரம்பிய வாக்குக்கு நாயகராயினர். அதல்ை, வாக்கிற் கருணகிரி என்னும் பழமொழியும், வாக்கிற் கருணகிரி வாதவூ ரார்கனிவில் தாக்கில் திருஞான சம்பந்தர்-நோக்கிற்கு நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரர்ை சொற்குறுதிக் கப்பரெனச் சொல்