பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (கவித்திறம்) 215 சான் ம்ை தனிப்பாடலும் எழுந்தன. மணிவாசகரது கனிவு சம்பந்தப் பெருமானது தாக்கு (ஆட்சி உரை, ஆணை உரை) . அப்பரது சொல்லுறுதி, சுந்தரரது நயம், நக்கீரரது நோக்கு (சந்தர்ப்பத்துக்கு ஏற்ற நடையால், சொல்லுங் காட்சியை மனக்கண் எதிரே அப்படியே தோற்றுவித்தல்) இவையாவுங் கலந்து பொலியும் எங்கள் அருணகிரிப் பெருமானது வாக்கு. உதாரணமாக 1. ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புரு கேன் பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந் துரையேன்” என் ம்ை மணிவாசகரின் கணிவை உனைத்தினந் தொழுதிலன், உனதியல்பினை உரைத்திலன், பல மலர் கொடுன் அடியிணை உறப் பணிந்திலன்' என்னுந் திருப்புகழிற் காணலாம். 2. வேயுறு தோளிபங்கன்’ என்னும் சம்பந்தப்பெரு மான து .ே ##! : * is தின் தாக்கை (ஆனை உரையை) 'நாளென் செயும்’ என்னும் கந்தரலங்காரத்திலும் (38), சேய வன் புந்தி’ என்னும் கந்தரந்தாதியிலும் (48) காணலாம். 3. நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் என் னும் அப்பர் சுவாமிகளின் சொல்லுறுதியை மரண ப்ரமா தம் நமக்கில்லை யாம்' என்னுங் கந்த ரலங்காரத்திற் (21) காணலாம். 1. மற்றைக் கண் தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதிரே,-என்னும் சுந்தரரது நயத்தைப் பாழ் வாழ் வெனுமிப் படுமாயையிலே வீழ்வா யென என்னை விதித் த%னயே*வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே என்னுங் கந்தரது பூதியிற் (31) காணலாம். 4. திருமுருகாற்றுப் படையில் அகல் சுமந்து, ஆர முழு முதலுருட்டி... இழுமென இழிதரும் அருவி' எனவரும் நக்கீரர் வாக்கு அருவி ஒட்டத்தை நமது மனக்கண் முன்பு காட்டுவது போல, அருணகிரியாரது-வழவழவென உமி ழுமது கொழகொழென ஒழுகி விழ’ (திருப்.862) என்னும் வாக்கு முதுமைப் பருவத்தின் கூத்தினை அப்படியே விளக்கி நமது மனக்கண் முன்பு காட்டுகின்றது. இதுவே நோக்கு