பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 அருணகிரிநாதர் சிலர் பெண்கள் மாயையிற் பட்டு அழிகின்ருர்களே! இறை வன் திருவடியைத் தியானித்துப் பிறவிக்கடலைக் கடக்கக் கூடாதா! இதென்ன காரணமோ! என வருந்துகின்ருர். அசத்தான உரைகளை மறந்து சத்தான உன்னை உணர்ந்து உருகி உன்னைப் பாடினுல் இழிவாகுமோ! எனக்கூறி உள். ளம் நொந்து வருந்துகின்ருர். (i) சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற்கு...மிக அன் புருதே மாயா காயத்தே, பசுபாசத்தே, சிலர் காமுற். றேயும் அது என் கொலோதான்! (திருப்.68), (ii) கலவியின்பம் விற்பார்கள் அவயவங்களைப் பாடு... சிலர் உளநெகிழ்ந்து, அசத்தான உரை மறந்து சத் தான உனை உணர்ந்து,*அபயம் என்று உனைப்பாடி உருகி நெஞ்சு சற்ருேதில் இழிவாமோ (திருப்.1230) இத்தகைய கருணையே இவரைக் 'கருணைக்கு அருண கிரி' என்னும் அருமைப் பட்டத்துக்கு உரிமையாள ராக்கி யது (பக்கம் 99 பார்க்க) (4) விகடம் : இவர் தமாவடிாக வேடிக்கையாகப் பேசும் இயல்பினர் போலும். ஒரிடத்தில் மாந்தர்களே ! பெண்கள் தோளோடு கூடி விளையாடும் மோக விளையாட்டு -சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை மார்க்கங்களில் எந்த மார்க்கத்தைச் சேர்ந்தது? 'இனிய மாதர் தோள் கூடி விளையாடும் சரசமோகம் *சரியையோ ? க்ரியா ஞான சமுகமோ ? (திரு. 1050); எனப் பரிகசித்து வினவுகின்றனர். (பக்கம் 202) (5) விலை மாதரையே வைதல் ; - இவரது நூலை ஆழ்ந்து படிக்காதவர்கள் இவர் தமது பாடல்களில் பெண் களை வைதுள்ளார் என்று ஒர் இழுக்குப் பேச்சுப் பேசு வது உண்டு. அது பிழையான கருத்து. அவர் வைதது. வஞ்சனை, சூது நிறைந்த விலை மாதரையே. இதனுண்மை திருப்புகழிற் பல இடங்களில் விளக்கப்பட்டுளது. உதா ரணமாக, 1180-ஆம் பாடலில் 'மானமில் போக மங்கையர்