பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (நால்வருடன் ஒப்புமை) 229 வர். இந்த நால்வகை மார்க்கங்களையும் ஒருங்கே அநுட் டித்தவர் அருணகிரியார். அதாவது பிள்ளை போல அன்பு செலுத்தியும், தாசனைப் போல ஊழியஞ் செய்தும், நண் பனப் போல நட்பு பாராட்டியும், சிஷ்யனைப் போல உபதேசம் பெற்று அன்புடன் பராவியும் முருகவேளிடத் தில் ஒழுகினவர் அருணகிரியார். உதாரணமாக எமை யாளுந் தகப்பன் (திருப். 239) அருணகிரிநாத எனும் அப் பனே போற்றி (திருப். 827), எந்தாயும் எனக்கருள் தந்தை யும் நீ (கந். அது. 46), எனப் புத்திர பாவத்தைக் காட்டி யும்; குற்றேவல் அடிமைசெயும் வகை அருளாதோ’ (திருப். 944) எனத் தாச மார்க்கத்தை வேண்டியும்:: எமக் கமிர்த தோழா கடப்ப மலர் அணிவோனே (திருப். 646) எனத் தோழனது நேச பாவத்தைப் புலப்படுத்தியும்; அன் புற உபதேசப் பொருளுட்டி (திருப். 814) எனச் சிஷ்ய நிலையைக் காட்டியும் பாடியுள்ளார். இனிச் சரியை, கிரியை, யோகம் ஞானம், எனப்படும் நால்வகை வழியைப் பற்றிப் பேறுபெற்றவர் முறையே அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் எனப் பெரி யோர் கூறுவர். அங்ங்னமே அருணகிரியார் ஒருவரே இந்நால்வரது நால்வகை வழிகளையும் கைப்பற்றி விளக்க முற்றனர் என்பதும் உணர்ந்து மகிழ்தற்பாலது: 'விருப் பொடுன் சிகரமும் வலம் வருகிலன் (திருப். 5) எனச் சரியை மார்க்கத்தையும், 'பாடும் பணியே பணியா அருள் வாய் (கந். அது. 1) எனக் கிரியை மார்க்கத்தையும் 'மூல வாசல் வெளிவிட்டுனது ரத்திலொளிர் யோக பேதவகை யெட்டுமிதில் ஒட்டும் வகை யின்று தாராய் (திருப்.439), துரங் கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு தோன்றிய சோதி யொடு சிவயோகம் துாண்டிய சீவைெடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும் வகை அருளாதோ (திருப். 1239) என யோக மார்க்கத்தையும், சுக ஞானக் கடல் மூழ்கத்தந் தடியேனுக் கருள்பாலிக்குஞ் சுடர் பாதக் குகனே :(திருப். 633) என ஞான மார்க்கத்தையும் ாைங்கே கைப்பற்றிப் பொலிங்க பொமான் ам те гот-дР Ғ.