பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 அருணகிரிநாதர் யார். தலங்களை நாடிச் சென்று தொழுததால் சரியை யாளராகவும், தலங்களில் அமர்ந்துள்ள ஆண்டவனைப் பாடித் தொழுததால் கிரியை யாளராகவும், முருகவேளி டம் யோக மார்க்கங்களை உபதேசம் பெற்று சிவ யோகத் தமர்ந்திருந்த சீலராதலால் சிவயோகியாகவும் முருகவேளிடம் சிவஞானம் பெற்ற செல்வராதலால் மெய்ஞ்ஞானியாகவும் அண்ணல் அருணகிரியார் விளங்கி னர். முருகவேளிடம் யோக மார்க்கங்க ளெல்லாவற்றை யும் உபதேச வழியாக அருணகிரியார் பெற்றனர் என் பது 'யோகத்தா றுபதேசத் தேசிக' எனவரும் திருப் புகழாலும் (68), சிவயோகம் என்னும் குருத்தையறிந்து முகமாறுடைக் குருநாதன் சொன்ன கருத்தை எனவரும் கந்தரலங்காரத்தாலும் (71) அறிகின்ருேம் பின்னும், நால்வர் காட்டிய அற்புதக் காட்சிகள் போல, அருணகிரியாரும் காட்டி யுள்ளார். உதாரண மாக, சம்பந்தப் பெருமான் இறைவனிடம் தாளம் பெற். றது போல், அருணகிரியார் இறைவனிடம் ஜெபமாலை பெற்ருர் அப்பர் கடலிற் கல்லே தெப்பமாக மிதந்து (பஞ்சபூதங்களில் ஒன்றன) நீர்தாங்க உய்ந்தது போல, அருணகிரியார் கோபுரத்திலிருந்து விழுந்தும் இறவாது (பஞ்ச பூதங்களில் ஒன்ருன) நிலந்தாங்க உய்ந்தனர். திரு மறைக் காட்டிலிருந்த நாவுக்கரசைத் திருவாய் மூருக்கு வா-எனச் சிவபிரான் அழைத்தது போல வயலூரிலிருந்த அருணகிரியாரை முருகபிரான் விராலி மலைக்குவா-என அழைத்தார். அப்பரும் சம்பந்தரும் சிவபிரானிடம் படிக்காசு பெற்றதுபோல அருணகிரியார் முருகவேளி டம் படிக்காசு பெற்ருர். சோமாசிமாற நயரைது யாகத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது நண்பர் சோமாசிமாற _நாயூருைக்காகச் சிவபிரான வரவழைத் துக்காட்டிய செயலொப்ப அருணகிரியாரும் ராஜ சன்ப யில் தமது நண்பர் பிரபுட தேவராஜனுக்காக் முருக வேளை வரவழைத்துக் காட்டினர். மாணிக்கவாசகர் புத்தர்களுை ஊமையாக்கி யடக்கி வாது வென்றது போல அருணகிரியார் வில்லிபுத்துாரரையும் சம்பந்தாண்டானை 蠶 வாதில் அடக்கி வென்றனர். மேலும், மாணிக்க