பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.7 அநுபந்தம் 2 அநுபந்தம் 2 1. அருணகிரிநாதர் மீதியற்றிய துதிப்பாக்கள் 1. அந்தாதி யில்லா இறைவனுக் கந்தாதி யன்றுரைத்தும் நந்தா வகுப்பலங் காரம் அவற்கே நளிை புனைந்தும் முந்தா தரவில் அவன் புகழ் பூதியும் முற்றுஞ் சொன்ன எந்தாய் அருண கிரிநாத என்னை நீ ஏன்றருளே 2. நெடியா னுகந்த மருகன் திருப்புகழ் நித்தமுமே படியார் படித்துப் பரகதி பற்றப் பரிந்தளித்த அடியான் அருண கிரிநாத னம்பொன் னடிமலர்க்கே அடியா ரெவரோ அவரேயெம் மாவிக் கருந்துணையே. தானந் தனத்ததன தானந் தனத்ததன தானந் தனத்ததன தனன தனதா ன. 3. மீனங் கொடிச்சிறுவன்2 மாளும் படிக்கனழல் வேகஞ் செலுத்தியவ னருளு முருகேசன் வேலுஞ் சிறைக் கொடிக3 லாபந்தழைக்கு மயில் வீடுஞ் சிறக்குபத முளரி யிருபாலும் மானங் கையர்ப் பனிரு தோளுங் கடப்ப மலர் *- வாசஞ்செய் செய்ப்பதியு நிதமு மறவாதே மாலங் கொழித்துலகெ நாளும் பிழைக்க அவன் மாமங்க ளப்பெருமை அள்வில் நசையோடும் தேனஞ் சருக்கரை நெய் பாலும் பலச்சுளைகள் சேருங் கனிச் சுவைகள் இழிவு படவே சீர்தேருந் திருப்புகழ் சொல் நாதன் கிளிச்சொரூபி சேயின் கலித்துறை4 சொல் கவிஞன் அநுபூதி5

  • திருப்புகழும் அதன் பலவகைய அரிய சந்த இசைகளும் முதல் முதலாகச் சென்னை மாகாணத்திற் பரவுதற்கு மூல க்ர்ரனராயிருந்த வள்ளிமலை-திருப்புகழ் சுவாமி சச்சி தானந்தா அவர்கள் விரும்பியபடி 1918-ஆம் ஆண்டில் இவை மூன்றும் அடியேனுல் இயற்றப்பட்டன.

2. சிறுவன்=காமன். 3. சிறைக் கொடி=சேவல்.