பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 அநுபந்தம் 3 அநுபந்தம் 3 —: 0 :— (1) திருப்புகழ் சாரம் பெரியோர்கள் திருவாசகம். என்னும் தேன்', திருமுரு காறெனுந் தேறல்’ என்ருர்கள்; திருப்புகழைத் திருப்புகழ் அமுது என்ருர்கள். அமிர்தம் எங்ங்னம் மிருத்துவை (இறப்பை) விலக்குமோ அங்ங்னம் திருப்புகழ் இறவாத இன்ப நிலையைத் தந்து உதவு மாதலின் அதை 'அமுது' என்றே ஆன்ருேர் பலரும் பாராட்டியுள்ளார். அமுதுடன் வேறு பல்சுவையுங் கூடியது திருப்புகழ் என்ருர் திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் ஆசிரியர் (பக்கம் 216) இலக்கண விளக்க நூலாசிரியராம் திருவாரூர்-வைத்திய நாத தேசிகர் 'மயிலம் பூரீ முருகன் பிள்ளைத் தமிழில்-திருப்புகழின் நறுஞ் சுவையைப் பின்வருமாறு சிறப்பித்துள்ளார் : கொண்ட லெனச்சந்தத் தமிழ் மாரிபெய் கொற்றவன் அருணகிரிக், கோமான் எண்டிசை யளவு நெடும்புகழ் கொண்ட அருட் செந்தேன், அண்டர் தெள் ளமுதொடு முக் கனி யூறல் அளவி வடித்தென்ன, அணிபெறு கவிதர மாலிகை நீபத் தலர்மாலிகையினுடன், கொண்டணி பன் னிரு பொற்புய பூதர கொட்டுக சப்பாணி, குக்குட கேதன மயிலநி கேதன கொட்டுக சப்பாணி' திருப்புகழ் பல வகையினும் மிக அருமையான ஒரு நூல். சொற்சுவை, பொருட்சுவை, பத்திச் சுவை இவை மூன்றும் இந்நூலில் தலை சிறந்து நிற்கும். இந்நூலின் அருமைக்குக் காரணம் அதன் பெருமை; பெருமைக்குக் காரணம் அதன் நடுநிலைப் போக்கு (சமரச பாவம்). தம்மை யாண்டருளிய முருக வேளை நடுநாயகமான குறிக்கோள் தெய்வமாகக் கொண்டு, கணபதி, சிவபிரான், பார்வதி, திருமால் ஆகிய பெருங் கடவுளரையும் ஒப்பிலா வகையில் உயர்த்திப்பாடி இத்தகைய கடவுளுக்கு இளையோனே, குரு நாதனே, குமரனே, மருகோனே எனப்பாடித் துதித்துச் செல்கின்ருர் அருணகிரியார். இந்த சமரச நிலையே