பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபந்தம் 3 253. சிற்றின்பப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தருவன-ஓலமிட்ட (326), கொலை கொண்ட (328), சீர் சிறக்கு (441), நெய்த்த: சுரிகுழல் (917) போன்ற பாடல்கள் ; பேரின்பப் பிரியர் களுக்கு உகந்தன மேற்சொன்ன பத்திரசப் பாடல்களும் பெருநிலைப்பாடல்களும் ஆம். இவ்வுண்மை யெலாம் ஆய்ந்: தறிந்தே திருமலை முருகன் பிள்ளைத் தமிழைச் சொன்ன வர் 'அறிந்தார் அறியார் இரண்டு மில்லார் ஆரும் எனப் போல் உனைத்துதிக்க அளித்த அருணகிரிநாதன்' எனப் பாடி மகிழ்ந்தார். (2) திருவகுப்பு சாரம் 'நடநவில் கலவி,.....கடம்பு.....வாள் வேல்.....திருமுக சமுக...முளரி..சேவல்...ஐவன வெற்பில் வஞ்சி கணவா' என்று மொழிதரு மொழியினல்லது பொற் பதங்கள் பெறலாமோ” (661)-எனத் தாம் ஒதினராதலின்-அதற்கு, இணங்க முருகன் திருவடி (சீர்பாத வகுப்பு), முருகன் அடி யார் பெருமை (தேவேந்திர சங்க வகுப்பு), முருகன் படை (வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு), முருகனுக்கு உகந்த நாயகி (வேளைக்காரன் வகுப்பு, வேடிச்சி காவலன் வகுப்பு), முருகன் திருவாய் மலர்ந்த திருமொழி (பெருத்த வசன வகுப்பு), முருகன் சேனை (பூத வேதாள வகுப்பு), முருகன் போர் வீரம் (அலகை வகுப்புக்கள், சேவகன் வகுப்பு), முருகன் உபதேசத்தாற் பெற்ற ஞான ப்ரசாதம், (திருஞான வேழ வகுப்பு, திருக்கையில் வழக்க வகுப்பு), முருகன் பன்னிருபுயம் (புய வகுப்பு), முருகன் திருப்புகழ்ப் பெருமை (சித்து வகுப்பு), முருகன் திருநோக்கச் சிறப்பு (கடைக் கணியல் வகுப்பு), முருகன் திருவருளாற் பெற்ற அன்பின் சிறப்பு (சிவலோக வகுப்பு) ஆகிய இவைகளைச் சந்தப் பாவால் மொழிந்து மொழிந்து மகிழ்கின்ருர். இதுவே திருவகுப்பு என்னும் நூல்; ஒதினர்க்கு முருகன் பொற் பதங்கள் எளிதாமாறு அருணகிரியார் அளித்த பிரசாதம் இது.