பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/278

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


258 அநுபந்தம் 3 கந்தரலங்காரத்திலும், தெளிவாகத் திருப்புகழிலும் அருண கிரியாரே குறிப்பிக்கின்றனர். கந்தர் அநுபூதியில், 'நாதா குமரா நமஎன் றரனுர் ஒதாய் என ஒதிய தெப்பொருள் தான்’-எனக் கேட்ட வினவுக்கு விடை பின் இரண்டடிகளிலேயே வெகு குறிப்பாக உள்ளது. எங்ங்னம் எனில், வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்பாதய்ை நீ யிருந்தும் 'நீ குறமின் பதசேகரன்’-எ ன் ரு ரே அது தான். எப்படி என்ருல், 'யான் எனது' என்னும் இரண்டும் எங்கே அற்றுள்ள னவோ அங்கே இறைவனைக்காணலாம். அங்கே இறை வன் தானே சென்று நின்று தோன்றுவன். வள்ளியம்மை முருகபிரானையே நாடி நின்ற காரணத்தால் முருகர் வள்ளி யின் தினைப்புனத்துக்குத்தானே சென்ருர். குறமின் (வள்ளி) பாத சேகரர் ஆர்ை. எனவே தன்னை யிழந்தால் தலைவனைக் காணலாம் என்பதே ரகசியப் பொருள். இந்நிலையை அநுட்டானத்திற் கொண்டு வந்து நடத்தினவள் வள்ளி யம்மையே. அவள் நிலையை உணர்ந்த முருகர் தாமே அவளை நாடிச் சென்று கல்யாணம் முயன்ருர் என்பதை, 'கின்னங் குறித்து அடியேன் செவி நீயன்று கேட்கச் சொன்ன குன்னம் குறிச்சி வெளியாக்கி விட்டது*சிறுமிதனை முன்னம் குறிச்சியிற் சென்று கல்யாண முயன்றவனே’’ -(கந். அலங்.24) என்னும் கந்தரலங்காரத்திற் காண்க. இதன் பொருள் 'முருகா ! என் மனக் கிலேசத்தை அறிந்து (நான் வேண் டின) ஒரு ரகசியத்தை நீ உபதேசித்தாய். அந்த ரகசியம் இன்னதென்பதை குறிஞ்சிநில ஊராகிய வள்ளிமலை எனக்கு வெளியாக்கி விட்டது. எப்படி யென்ருல் அவ்வேட்டுவச் சிறுமியை நாடி நீயே அவளிருந்த ஊருக்குச் சென்று