பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபந்தம் 3 259 அவளைக் கலியாணம் செய்து கொள்ள முயன்ரு யாதலின்’ இச் செய்யுளில் 'சென்று' என்பது எத்துணைப் பொருளா ழத்துடன் கூடியது! இறைவன் தானே சென்ருர் என்பது தான் அவரது அருட்டிறம். இந்த அலங்காரச் செய்யுளால் வள்ளியம்மை கைப்பற்றின நன்னெறியே இறைவனை வசப்படுத்தக் கூடிய நெறி என்பதும் இந்த நெறியையே கைப்பற்றுக-எனவும் அருணகிரியார்க்கு முருகர் உபதே சித்தனர் என்பதும் தெரிகின்றன. இதுவே தன்னை மறந் தாள் தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என அப்பர் சுவாமிகள் குறிப்பிட்ட நிலை. இந் நெறியை அருணகிரியார் சுருக்கமாக வள்ளிச் சன்மார்க் கம்” எனக் குறிக்கின்றனர். இதற்கு வள்ளி அநுட்டித்த நன்னெறி' என்பது பொருள். எனவே முருகபிரான் உப தேசித்த ரகசியப் பொருள் என்ன என்ருல் யாரொருவர் தன்னை யிழந்து (யான்-எனது என்பன அற்று) தலைவனை நாடுகின்றனரோ அவரை இறைவன் தானே நாடிவந்து அருள் புரிவன் என்பது தெளிவு. இந்த வள்ளிச் சன் மார்க்க ரகசியத்தைத் தான் முருகபிரான் சிவபிராற்கு உப தேசித்தனர் என்பது 'கள்ளக் குவாற்பை” (317) என்னுந் திருப்புகழில், 'வள்ளிச் சன்மார்க்கம் விள்ளைக்கு நோக்க வல்லைக்கு ளேற்றும் இளையோனே' என அருமையாக விளக்கப்பட்டுளது. இதன் பொருள் விள் ஐக்கு-ரகசிய உபதேசம் எது என்று வினைவிய தந் தைக்கு வள்ளிச் சன்மார்க்கம்-வள்ளி அதுட்டித்த நல் வழியே தலைவனே (கடவுளை) வசப்படுத்தும் வழியென்று, நோக்க வல்லைக்குள்-ஒரு நொடிப் பொழுதில் (விரைவில் கண்ணிமைப் பொழுதில்), ஏற்றும் (அவர் காதில் ஏற்றிய) உபதேசித் தருளிய இளையோனே-குழந்தைக் குரு நாதனே' என்பது. அந்த ரகசிய வழியை அநுட்டித்த வள் வள்ளி. இந்த ரகசியத்தைத் தான் முருகபிரான் சிவ பிராற்கு உபதேசித்தனர். வள்ளிச் சன்மார்க்கமே ரக