பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/284

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


264. அருணகிரிநாதர் செப்பிய திறஞ்சேர் செம்மலே போற்றி இலங்கைத் தீவின் எழிலுறு தலங்கள் 95 தரிசனம் செய்த சதுரனே போற்றி மகாடவி ஒன்றில் வழியிழந் தங்கே அலமந்த போதில் அறுமுக வள்ளல் சகாயஞ் செய்யத் தழைந்தனை போற்றி இலங்கைத் திவில் எழி ற்கதிர் காமத் 100 தலத்தினில் வேடன் தந்த பூஜையை மகிழ்ந்தவ என்ன மயிலவற் றுதித்தே 'அகரமு மாகி’ எனவரும் அந்த திவ்விய திருப்புகழ் திருவளர் சோலை மலையினிற் பாடி வணங்கினை போற்றி 105 துருத்தித் தலத்தில் சுப்பிர மணிவேள் மயிற்பொறி வேற்பொறி வழங்கப் பெற்ற மகாதவம் பெற்ற மாண்பினை போற்றி தணிகை மலையினிற் சாமி நடனங் கண்டு களித்த கண்ணிய போற்றி 110 வள்ளி யாடிய வள்ளி மலையைக் குன்னம் குறிச்சி வெளியாக் கியமலை இஃதென விளக்கிய எந்தாய் போற்றி தமது மடத்திற் சண்முகன் உருவைக் கழிபே ருவகையில் வழிபாடாற்றிய 115 சோம நாதரின் துரய பத்தியை எடுத்து விளக்கிய இறைவ போற்றி செந்தமிழ் மணமுடன் தெய்வ மணங்கமழ் அலங்கார மாலை அருளினை போற்றி தேவி உபாசனைச் சம்பந் தாண்டான் 120 வரவழை முருகனை எனவழக் கிடலும் தேவேந்த்ர சங்க வகுப்பது செப்பித் தேவியைத் திருப்தி யூட்டிச் சேயை மயிலுமாடி வாஎன் றழைத்து மன்னன் பிரபுட தேவன் மகிழச் 125 சபைதனிற் காட்டிய சதுர போற்றி