பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/285

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


போற்றி அகவல் 265 கிளிஉரு அதனிற் கிளர்ந்து பறந்து பண்ணவர் உலகுறு பாரி ஜாதப் பூ மண்மிசைக் கொணர்ந்த மகிப போற்றி தனதுடல் மறைந்த தகைமையைக் கண்டதும் 130 திருவருள் இஃதெனத் தேறிச் சுகவுரு சுகவுரு என்னச் சுகித்த நிலையில் அநுபூ திக்கவி அருளினை போற்றி அவ்வத் தலங்களில் அருளிய கவிகளில் உலகோர் உய்யும் ஒருவழி காண 135 விளக்கம் பலபல விரித்தனை போற்றி கனைத்தெழும் பகட்டினன் கலக்குறும் செயலற 'உனைத்தினம்’ எனும் புகழ் உரைத்தனை போற்றி எப்போது வருவாய் என் முன் எனவரு 'முந்துதமிழ்ப் பாவை மொழிந்தனை போற்றி 140 என்று நின் தெரிசனை எனக்குறு மோஎனும் 'அந்தகன்’ எனும் புகழ் அருளினை போற்றி 'வீணுள் படாதருள்' எனும் புகழ் விழைந்து சொற்ற திருப்புகழ்ச் சுந்தர போற்றி "நாத விந்து கலாதி என நவின் 145 ருேது பூஜைப் புகழ் உல குய்ய ஒதின எங்கள் உத்தம போற்றி இக்குறை உண்டிங் கிந்நலம் இல்லை என்னிடத் தெனமுறை யிட்ட புகழ்ப்பா உலகுய ஈந்த உண்மைய போற்றி 150 செனனமிங் குண்டெனில் செவிடு குருடெனும் குறைகளாற் குன்றிக் குறைபடா வகைதந் தென்மனம் என்றும் நின்பாற் பொருந்துக எனுமுறை யீட்டை எம்பிரா னிடத்தே வைத்த அருள் நிறை வித்தக போற்றி 155 முப்பால் செப்பிய கவிதையின் மிக்கதாம் தேவா ரஞ்சொலும் தெய்வம் இவரென ஏத்தி ஓர் நுண்பொருள் இயம்பினை போற்றி ஆறு முகமென ஆறு முறை சொலித்