பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/286

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


266 அருணகிரிநாதர் திருநீ றிடும்வகை தெரித்தனை போற்றி 160 ஞான யோக நன்னிலையதனை "ஞானங்கொள் பொறி"தனில் நாட்டினை போற்றி 'இகபர செள பாக்யம் இருநிலத் தோர்பெற ‘வசனமிக" என்னும் மாண்பார் பாவை வகுத்த கருணைசேர் வரதனே போற்றி 165 வரதா மணி’ எனும்வலமார் புகழில் ரசவா தத்தை உதவா ரசமென உதறித் தள்ளிய உத்தம போற்றி மகவது வேண்டினுேர் மகவது பெறவே பிள்ளைப் பெருமதின் பீடுறு வாயால் 170 முத்தந் தந்தருள் எனவரும் மொய்ம்பார் புகழது செப்பிய புண்ணிய போற்றி ஒவிய அந்தமே ஒன்றுக எனவிழை ஒர்புகழ் உரைத்த ஒள்ளிய போற்றி 'நாவே றெ’னவரும் நற்றிருப் புகழில் 175 நீநான் அற எனும் நின்மல முத்தியை நாடி விரும்பிய நாதனே போற்றி 'இடர்சங் கைகளவை எனக்கலக் காவகை எந்தாய் அருளென எந்தையை வேண்டி நாமுய அதிரும் கழலெனும் நற்பா 180 தந்த கருனைத் தம்பிரான் போற்றி சமாதி மனுேலயம் தந்தருள் என்னும சமான மில் புகழைச் சாற்றினை போற்றி திருப்புகழ் செப்பும் திறத்தினர் உழைநான் சேர்வகை யருளெனும் செம்மலே போற்றி 185 நோயிலா வாழ்வை நாம்பெறு நோன்மை பெற்றுய வேண்டிப் பேரரு ளோடே 'இருமலு ரோக முயலகன் வாதம்’ எனும்புகழ் எங்கட் கீந்தனை போற்றி பகைத்திறம் வெல்லும் பானம தாகும் 190 சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்’ எனும்புகழ் செப்பிய எம்மான் போற்றி